search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அமைப்புக
    X
    விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அமைப்புக

    திருவாவடுதுறை ஆதீனத்தில் விருது வழங்கும் விழா

    திருவாவடுதுறை ஆதீனத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் பழமைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.  சுதந்திர இந்தியாவிற்கு செங்கோல் வழங்கி துறவியின் பெருமையை உலகறியச் செய்த சிறப்புக்குரியது.

     இந்த ஆதீனத்தில் 75-ம் சுதந்திர ஆண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 75 தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு, எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பின் 17-ம் ஆண்டு விழாவையொட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ் சுவாமிகள், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணிசம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ்மகராஜ் ஆகியோர் சிறப்புரையா ற்றினர். விழாவில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் சுதந்திர விழாவில் செங்கோல் வழங்கிய திருவாடுதுறை ஆதீனத்தின் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக சமுதாய பணியாற்றக்கூடிய 10 அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் அருட்கொடை மற்றும் சிறந்த சமூக சேவகர்கள் 75 பேருக்கு சமுதாய சிற்பி என்ற சிறப்பு விருதினை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கி உரையாற்றினார்.

    எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகர் வரவேற்றார். மகாலிங்கம் ஓதுவார் திருமுறை பாடி னார். மூத்த வக்கீல் சிவபுண்ணியம், ஆதீனம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமூ ர்த்தி, ஆதீனப் புலவர் குஞ்சிதபாதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆதீன அலுவலகமேலா ளர் சுந்தரேசன், கண்கா ணிப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×