search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது.
    X
    வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது.

    பேரூராட்சி மன்ற கூட்டம்

    வைத்தீஸ்வரன்கோவிலில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன்,  துணைத்தலைவர் அன்புச்செ ழியன் முன்னிலைவகித்த னர். இளநிலை உதவியாளர் பாமா பல்வேறு தீர்மானங்க ளை படித்தார்.
     
    இதனை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் உழவன், திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும். பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட புதிதாக இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் உறுப்பினர்களின் நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-

    ராஜா கார்த்திகேயன் (அ.தி.மு.க) :- வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    முத்துக்குமார் (பா.ம.க) :- எனது பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து தர வேண்டும்.

    கவிதா (தி.மு.க) :-எனது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூடுதலாக குடிநீர் வசதி செய்து தரவேண்டும் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும். இதைப்போல் அ.தி.மு.கவை சேர்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரியங்கா, மீனா ஆகியோர் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கைகளைமனுவாக தலைவரிடம் நேரில் கொடுத்தனர்.

    துணைத் தலைவர்:- வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்ட புதிய இடம் தேர்வு செய்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

    தலைவர்:- பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வாசிகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றார். வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அரசிடமிருந்து கூடுதல் நிதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

    கூட்டத்தில் துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×