search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் தலைவர் கஜேந்திரன் பேசினார்.
    X
    கூட்டத்தில் தலைவர் கஜேந்திரன் பேசினார்.

    ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

    சீர்காழியில் ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழியில் ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், வணிகர்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.செயலாளர் முஸ்தபா, வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், ரோட்டரி சங்க முன்னாள் செயலர் சண்முகம், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் இரா.சுதாகர், வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்க தலைவர் ஞானமணி, தொழிலதிபர் சுரேஷ்குமார், செல்போன் விற்பனை சங்கத்தை சேர்ந்த மார்க்ஸ்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கொரோனா பரவல் தொடங்கிய 2020ம் ஆண்டுக்கு முன்பு வரை சீர்காழி ரயில் நிலையத்தில் இரு மார்கங்களிலும் பல்வேறு விரைவு ரயில்கள் நின்று சென்று வந்த நிலையில் அதன்பிறகு கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 13க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சீர்காழியில் நின்று செல்வதில்லை.இதனால் வணிகர்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு அலைகழிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து ரயில்வே அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் உரிய தீர்வு இல்லாததால் வரும் 14ம் தேதி சீர்காழி ரயில் நிலையம் முன்பு மிகப்பெரிய கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

    இதில் சீர்காழி பகுதியை சேர்ந்த அனைத்து அமைப்புகள், சங்கங்கள், பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனர்.
    இதிலும் தீர்வு ஏற்பாவிட்டால் அடுத்தகட்டமாக சீர்காழியில் வணிகர்சங்கம் ஒத்துழைப்புடன் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது என முடிவு செய்யப்பட்டுது.இதனை அதன் தலைவர் கஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கூட்டத்தில் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×