என் மலர்
மதுரை
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு லட்சதீபம் நடக்கிறது.
- ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.
திருவிழாவின் 5-ம் நாளான நேற்று இரவு, கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்தாய்ப்பாக இன்று இரவு மீனாட்சி கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. குறிப்பாக பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
- ஆமை வேகத்தில் சாக்கடை-குடிநீர் திட்டப்பணிகள் நடக்கிறது.
- பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வைத்துள்ளனர்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை 72 வார்டுகள் இருந்தன. பின்னர் கூடுதலாக 28 வார்டுகள் சேர்க்கப்பட்டு 100 வார்டுகளாக மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டது.இதனால் திருப்பரங்குன்றம், கூடல் நகர், ஆனையூர், பெருங்குடி, திருப்பாலை, உள்ளிட்ட பகுதிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக இந்த விரிவாக பகுதிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் சரிவர இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.ஆனால் மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர், சாக்கடை வரிகளை முறைப்படி செலுத்தி வருகிறார்கள்.
பல மாதங்களாக விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தெருக்கள் உள்ளன. செல்லூர்-குலமங்கலம் சாலை இன்னும் சீரமைக்கப்ப டாததால் வாகனங்கள் செல்லமுடியால் திணறி வருகிறது.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தபால் தந்தி நகர், பார்க் டவுன், கோசா குளம், ஆனையூர், கூடல் நகர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வீதிகளும் குண்டும், குழியுமாக உள்ளன. மழை காலங்களில் இந்த தெருக்களில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் சேறும், சகதியும் அலங்கோலமாக காட்சி யளிக்கிறது.
அங்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளும் சரிவர மூடப்படாததாலும், இந்த பணிகள் மந்த நிலையில் நடப்பதாலும் வீதிகள் சீரமைப்பின்றி வாகனங்களில் செல்லும் பெண்களும், மாணவிகளும் பள்ளங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
சில இடங்களில் மட்டும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ஓரளவு நடைபெற்றுள்ளன. இன்னும் பணிகள் பல்வேறு இடங்களில் அரை குறையாகவே காணப்படுகிறது. பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து சாலைகளில் வாகனங்களில் செல்லவும், நடக்கவும் முடியாமல் வேதனை அடைந்து வருகிறார்கள்.
மாநகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் கட்டினாலும் மாநகராட்சி அடிப்படை வசதிகளை செய்து தராமல் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக விரிவாக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக வீதிகள் மழைநீர், மற்றும் சேறும் சகதியுமான காணப்பட்ட நிலையில் தற்போது மேடு, பள்ளங்களால் மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களை சீரமைப்பதில் மெத்தனம் காட்டுவதாகவும், புகார் தெரிவிக்கும் மக்க ளிடம் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற பகுதிகளுக்கு கேட்கவா வேண்டும்?
கலைநகர், பட்டிமேடு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தற்போது தார் சாலைகள் அமைத்துவிட்டு மற்ற தெருக்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் இனியாவது விழித்துக் கொண்டு சேதமடைந்த சாலைகள் மற்றும் வீதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்ட பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வைத்துள்ளனர்.
- மதுரை ரெப்கோ வங்கியில் சிறப்பு கடன் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
- மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும், மற்றவர்களுக்கு 7.40 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
மதுரை
ரெப்கோ வங்கி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வங்கி மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த வங்கியின் மதுரை கிளையில் சிறப்பு கடன் முகாம் தொடங்கியது.
முகாமை டாக்டர் தேவசங்கர், டாக்டர் பிரமில்டா, வங்கியின் சட்ட ஆலோசகர் சரவணன் மற்றும் வங்கியின் இணை பொது மேலாளர் சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த முகாம் 5-1-2023 வரை நடைபெறுகிறது. இந்த காலத்தில் சேவை கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் தங்க நகைக்கடன் கிராம் ஒன்றுக்கு ரூ. 3,900 வரை வழங்கப்படுகிறது.
வங்கியின் 54-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு டெபாசிட் திட்டமும் அமலில் உள்ளது. இதில் மிக மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும், மற்றவர்களுக்கு 7.40 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
முகாம் தொடக்க விழாவை மேலாளர் நாகசூர்ய புனிதா தொகுத்து வழங்கினார். முடிவில் உதவி மேலாளர் ஜோயல் நன்றி கூறினார். மதுரையில் உள்ள கிளைகளான பீ.பி.குளம், வில்லாபுரம் மற்றும் மேலூர் கிளைகளிலும் இந்த சிறப்பு கடன் முகாம்கள் நடைபெறுகிறது.
- நகை-பணத்தை தொலைத்த பெண்ணின் கைப்பையை ஆட்டோ டிரைவர் மீட்டுக்கொடுத்தார்.
- அவரை போலீஸ் துணை கமிஷனர் பாராட்டினார்.
மதுரை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கற்பகம் என்பவர் கடந்த 4-ந் தேதி திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். அவர் பாண்டி கோவிலில் இருந்து ஆட்டோவில் திருமண மண்டபத்துக்கு சென்றார்.
அப்போது கற்பகம் வைத்திருந்த கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்து விட்டு திருமண மண்டபத்தில் இறங்கி விட்டார். சிறிது நேரம் கழித்து பையை ஆட்டோவில் தவறி விட்டுச்சென்றது நினைவு வந்தது. கற்பகம் செய்வதறியாமல் தவித்து நின்றார்.
இதற்கிடையே கற்பகத்தை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் தனது ஆட்டோவில் ஒரு கைப்பை பார்த்தார். அதில் 2 1/2 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்து 500 ரொக்கம், வீட்டு சாவி மற்றும் செல்போன் ஆகியவை இருந்தன. உடனே முருகன் அந்த பையை மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, கற்பகத்தின் பை என தெரியவந்தது. இதையடுத்த அந்த பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆட்டோவில் கிடந்த கைப்பையை போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் முருகனுக்கு தெற்கு வாசல் போலீஸ் துணை கமிஷனர் சண்முகம், கீரைத்துறை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகபெருமாள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
- வாடிப்பட்டியில் ஜெயலலிதா நினைவு தின மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.
- தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா நினைவு தின மவுன அஞ்சலி நடந்தது. பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனத்துரை, நிர்வாகிகள் ராஜேந்திரன், திருப்பதி, முத்து கண்ணன், மருதையா, பொன்ராம், ரங்கராஜ், பிரேம், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை செயலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையில் விராலிப்பட்டி, செம்மினிபட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி. பூச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிளைச் செயலாளர்கள் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
- பாலமேடு பகுதிளில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டில் பிள்ளையாக வளர்த்து தெய்வமாக வணங்கி பராமரித்து வருகின்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
தைப்பொங்கல் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தான்.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை இப்போதிருந்தே களத்தில் இறங்கி வீறு கொண்டு விளையாட தயார்படுத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர், பாலமேடு பகுதிளில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டில் பிள்ளையாக வளர்த்து தெய்வமாக வணங்கி பராமரித்து வருகின்றனர். இந்தநிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்தப்பகுதியில் நேற்று முன்தினம் வேனில் மர்ம கும்பல் வந்து. இவர்கள் ரோட்டில் சுற்றித்திரிந்த மஞ்சமலை சுவாமி கோவில் காளை உள்பட 3 காளைகளை வேனில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். மறுநாள் 3 காளைகள் காணாதது கண்டு உரிமையாளர்கள் பாலமேடு போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மர்ம கும்பல் சரக்கு வேனில் காளைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருடப்பட்ட சம்பவம் காளை வளர்ப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் மார்க்கெட்டில் 7-ந் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
- மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை
மதுரை மாட்டுத்தா வணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியை கண்டித்து நாளை மறுநாள் (7-ந் தேதி) புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.
இதில் மாட்டுத்தாவணி தக்காளி மற்றும் சீமை காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் வண்டி உரிமையாளர் சங்கம், அழுகும் பொருட்கள் மற்றும் மாத வாடகை வியாபாரிகள் பொதுநல சங்கம், ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன. இது தொடர்பாக சங்க தலைவர்கள் நீலமேகம், முருகன், சேகர், மோகன்ராஜ், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் கடந்த 118 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
தேசிய பேரிடர் காலத்தில் உயர்த்தப்பட்ட 36 மாத வாடகை உயர்வை ரத்து செய்ய பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த 2016-2017ம் ஆண்டு வரை 14 மாத கால வாடகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதேபோல நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும், அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மேலும் உயர்த்தப்பட்ட வாடகையை திருத்தம் செய்ய வேண்டும். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் 1836 கடைகள் உள்ளன. இதில் 1000 கடைகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். சென்ட்ரல் மார்க்கெட் என்பது சுடுகாட்டு பகுதியாகும். இங்கு எங்களுக்கு தற்காலிகமாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அப்போது மத்திய- மாநில அரசுகள் சார்பில் 27 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து 85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு நிதி தரவில்லை என்பதை காரணம் காட்டி அந்த திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.
மதுரை சென்ட்ரல் மார்க்கெட் தொடர்பாக நீதிமன்றத்தில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அலட்சியத்தை கண்டித்து வருகிற 7-ந் தேதி கடை அடைப்பு நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
- அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் நடந்தது.
அவனியாபுரம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக பகுதி செயலாளர் ஆட்டோ கருப்பையா தலைமையில் வட்ட கழக செயலாளர் கொம்பையா முன்னிலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கண்ணன், மகாலிங்கம், பவுண்டு ராஜ், வட்டச் செயலாளர் கமலக்கண்ணன், பகுதி இளைஞரணி செயலாளர் ஓம் ஜெயபிரகாஷ், அம்மா பேரவை செயலாளர் பைபாஸ் ரமேஷ், வெள்ளூர் கார்த்திகேயன், ராதா, முத்து, கணேசத்தேவர், திருப்பதி, ஆட்டோ ராஜ கோபால், கலைப் பிரிவு முத்துப்பாண்டி மற்றும் அவனியாபுரம் கிழக்கு மேற்கு மத்திய பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் அமைதிப்பேரணி நடத்தினர்.
- மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ். கண்ணன், வி.கே.எஸ்.மாரிசாமி, முத்து இருளாண்டி,அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரி துரை, மீனவரணி செயலாளர் ராமநாதன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலைபிரபு, கருப்பையா, கொம்பையா,கண்ணன், வேல்முருகன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், மிசா செந்தில் மற்றும் 200 பெண்கள் உள்பட 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று ஏடு கொடுக்கும் விழா நடந்தது.
- விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று ஏடு கொடுக்கும் விழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று ஏடு கொடுக்கும் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு காலையில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பின்பு கோவில் ஆஸ்தான மண்டபத்தில் கோயில் ஓதுவார் முத்து விநாயகம் நடராஜர், சிவகாமி அம்மன் முன்பு தேவார பாடல் பாடி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
- இதற்கான ஏற்பாடுகளை அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி மாவட்ட செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமையில் அந்த கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம், முத்துக்குமார், பாலா, என்.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.






