என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரியை அடுத்த கே.பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 31). தச்சுத்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. கடந்த 25-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மணி விஷம் குடித்து விட்டுவீட்டுக்கு அருகில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மணி இறந்தார். தகவல் அறிந்த மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குருபரப்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரியை அடுத்த கே.பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 31). தச்சுத்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. கடந்த 25-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இதனால் மனமுடைந்த மணி விஷம் குடித்து விட்டுவீட்டுக்கு அருகில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மணி இறந்தார். தகவல் அறிந்த மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி தற்கொலை ெசய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    சாமல்பட்டி போலீசார், காமாட்சிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கோவிந்தன் (வயது 54) என்பவரை கைது செய்தனர். இதேபோல் ஊத்தங்கரை போலீசார், துறிஞ்சிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கோவிந்தராஜ் (27) என்பவரை கைது செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நூர்முகமது (43) என்பவரை கைது செய்தனர். பாகலூர் போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற சவுகத்அலி (23) என்பவரை கைது செய்தனர்.
    ஊத்தங்கரை அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே உள்ள மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி கவுண்டர். இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    அப்போது மயானத்திற்கு செல்லும் பாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்ததால் அவர்களால் பிணத்தை கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை சரி செய்யக்கோரி பிணத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை தாசில்தார் தண்டபாணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் பூமலர் ஜீவானந்தம் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு பிணத்தை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இறந்தவரின் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    போச்சம்பள்ளி அருகே ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி மனோன்மணி (வயது 33). இவர் புளியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் மொபட்டில் போச்சம்பள்ளியில் இருந்து பர்கூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கூச்சூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி போலீசார், ஏரிக்கோடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேலு (வயது 55) என்பவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை போலீசார் சோதனை செய்ததில், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வேலுவை கைது செய்தனர்.

    இதேபோல் தேன்கனிக்கோட்டை போலீசார், எர்ரசெட்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் கஞ்சா வைத்திருந்த அதேபகுதியை சேர்ந்த மாரியப்பன்(45) என்பவரை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் வீடுகளில் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் சிப்காட் போலீசார் அனுமேபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நிதிஷ் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே போல், சூளகிரி போலீசார் சிகரலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சாசன் (24) என்பவரை கைது செய்தனர்.
    அஞ்செட்டி அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி அருகே உள்ள பிலிகுண்டுலு கிராமத்தை சேர்ந்தவர் கருங்கனி (வயது 52). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள பாறை கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் பிரசாந்த் (வயது (வயது 23). இவர் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

    இதே ஊரைச் சேர்ந்தவர் சக்கரை. இவருடைய மகன் கோவிந்தராஜ் (21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராணுவ பயிற்சி முடித்து விட்டு நேற்று முன்தினம் தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்தார். நண்பர்களான பிரசாந்த்தும், கோவிந்தராஜூம் நேற்று காலை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை செல்லும் சாலையில் காவேரிப்பட்டணம் அருகே சின்னமுத்தூர் இணைப்பு சாலை பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த பிரசாந்த் காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீசார் திப்பசந்திரம் ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே கிராமத்தை சேர்ந்தவர் குண்டப்பா (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் டவுன் போலீசார் ராம் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் ஆசீப் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூரை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 19). டீக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள ஜெக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மய்யா. இவருடைய மகன் புருசோத்தமன் (வயது 26). கம்பி கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அந்த பகுதியில் உள்ள புளிய மரத்தில் புருசோத்தமன் தூக்கில் பிணமாக தொங்கினார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
    ×