என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சான மாவு வனப்பகுதியில் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த மாதம் 100-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் சான மாவு பகுதிக்குள் வந்தன. இவை பல குழுக்களாக பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இதையடுத்து வனத்துறையினர் போராடி யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் யானை சாலையை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி, திடீரென யானை மீது மோதியது. இதில் யானையின் பின்னங்கால், வயிற்று பகுதியில் பலமாக அடிபட்டு சாலையில் விழுந்து கிடந்தது.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அதிர்ச்சி அடைந்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த வனத்துறையினர் அடிபட்டு கிடந்த யானைக்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் யானையால் அசையக் கூட முடியாமல் சுருண்ட நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது.
இந்த நிலையில் கால்நடை மருத்துவர் குழுவினர், யானையை காப்பாற்ற கடுமையாக போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைமுத்து (35) என்பவர் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் உள்ள தர்காவில் வருகிற 24-ந் தேதி உருஸ் விழா நடக்கிறது.
இதையொட்டி அங்கு பராமரிப்பு பணிகளை செய்வதற்காக பெங்களூரு பொம்மஹள்ளி அருகே உள்ள மங்காபாலையா பகுதியை சேர்ந்த ஜிலான் (வயது 24), அவரது நண்பர் அர்பர் பாஷா (24), மற்றும் அவரது தம்பி கிஷான்(14) உள்பட 6 பேர் நேற்று இரவு காரில் புறப்பட்டனர்.
நள்ளிரவு 12 மணியளவில் கார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- கெலமங்கலம் சாலையில் அக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கார், ரோட்டில் உருண்டப்படியே கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டிய ஜிலான், மற்றும் அர்பர் பாஷா ஆகியோர் காரின் இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் கிஷான் படுகாயம் அடைந்தார். மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஓசூர் மத்தகிரி போலீசார் விரைந்து வந்தனர். பலியான ஜிலான், அர்பர்ஷா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த கிஷான் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 3 பேர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ரோட்டில் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் கெலமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






