என் மலர்
செய்திகள்

விபத்து பலி
தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் பேரண்டப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இதில் சின்னராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






