என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்களை விட சுயேச்சை வேட்பாளர் அமானுல்லாவின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக  முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் வேப்பனப்பள்ளி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. வேட்பாளரை அறிவித்தது அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து வேப்பனப்பள்ளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பச்சிபாறை கிராமத்தில் ஒன்று கூடினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. வினர் உள்ளடி வேலைகள் பார்த்து காங்கிரசை தோற்கடித்தனர். இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு புகார் செய்தும் கண்டிக்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க போவதில்லை’ என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளரை காங்கிரஸ் நிர்வாகிகள் களம் இறக்கியது, தி.மு.க. நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக அமானுல்லா என்பவரை களம் இறக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தி.மு.க.வை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் அமானுல்லா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இதில் வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்களை விட சுயேச்சை வேட்பாளர் அமானுல்லாவின் சொத்து மதிப்பு அதிகமாகும். அதாவது வேட்பு மனுவில் அவர், தனது சொத்துக்கள் 12 கோடியே 66 லட்சத்து 44 ஆயிரத்து 848 ரூபாய் அசையும், அசையா சொத்துகள் என்றும், தனது இரு மனைவிகள் பெயரில் ஒரு கோடியே 83 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அசையும், அசையா சொத்துகளும் உள்ளன. மேலும் தனக்கு 2 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரத்து 310 ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    காவேரிப்பட்டணம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மாது (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    ஊத்தங்கரை தாலுகா அத்திபாடியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 28). விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் திருப்பதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளியை சேர்ந்தவர் மணி (வயது 38). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவருடைய வீட்டில் மின்சாரம் இல்லை. இதனால் சுவிட்ச் பாக்ஸ் திறந்து பார்த்த போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மணி இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குருபரப்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஓசூர் சிப்காட் அருகே லாரி மீது கார் மோதியதில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     சூளகிரி:

    ஓசூர் சிப்காட் அருகே பேடரப்பள்ளியை சேர்ந்தவர் தீபக்சிங் (வயது 38). சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் காரில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சின்னாறு அருகில் சென்று கொண்டு இருந்தார். காரை ஓசூர் நேதாஜி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (31) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தீபக்சிங் சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்திகிரி அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்திகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் அருகே உள்ள கொண்டப்பநாயனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று அவர் பஸ்சில் பேளகொண்டப்பள்ளி பக்கமாக வந்து கொண்டிருந்தார். 

    அப்போது அந்த பஸ்சில் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார் (23) என்பவர் பொருட்களுடன் வந்தார். அதற்கும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கூறினார். இதற்கு கவுரவ் குமார் மறுத்து தகராறு செய்து கண்டக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரவ்குமாரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வேன் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பீ.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்ரெட்டி. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). வேன் டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவருடைய தாயார் உமா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேன்கனிக்கோட்டை தாலுகா கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ஆனந்த் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

    இதனால் மனமுடைந்த ஆனந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்ேகாட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பர்கூர் அருகே உள்ள மேடுகம்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராசு (37). கட்டிட தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

    அவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தராசு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
    தேன்கனிக்கோட்டை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்து வருகிறார்.

    அந்த வகையில் தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என பார்வையிட்டார்.

    மேலும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி: 

    கிருஷ்ணகிரி அருகே உள்ள வெங்கடாபுரம் ஊராட்சி கே.ஏ.தர்கா பகுதியை சேர்ந்தவர் முதாஸீர். இவரது மனைவி சபனா (வயது 29). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் போதுமான வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த சபனா பலரிடம் பணம் கடனாக வாங்கினார். கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மனமுடைந்த சபனா, கடந்த 5-ந் தேதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

    அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சபனா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட விபத்தில் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 37). இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மேம்பாலத்தில் அவர் சென்ற போது ரோந்து வாகனம் பழுதானது. இதையடுத்து அவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் மீட்பு வாகனத்தை வரவழைத்தனர்.

    அப்போது மீட்பு வாகனத்தையும், ரோந்து வாகனத்தையும் கருணாகரன் இணைத்து கொண்டிருந்த போது, மீட்பு வாகனத்தின் ஓட்டுனர் எதிர்பாராத விதமாக ஓட்டினார்கள். இதனால் வாகனங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கருணாகரன் மீது மீட்பு வாகனம் ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருணாகரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பர்கூர் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் அருகே உள்ள நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). விவசாயி. சம்பவத்தன்று இவரை, அதே ஊரை சேர்ந்த ராஜப்பன் (50), அவரது மனைவி காவேரியம்மாள் (45), மகன்கள் ராமகிருஷ்ணன் (25), சிவக்குமார் (22) ஆகியோர் முன்விரோதம் காரணமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீசார், ராஜப்பன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×