என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வேன் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வேன் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பீ.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்ரெட்டி. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). வேன் டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவருடைய தாயார் உமா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேன்கனிக்கோட்டை தாலுகா கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ஆனந்த் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த ஆனந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்ேகாட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர் அருகே உள்ள மேடுகம்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராசு (37). கட்டிட தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தராசு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






