என் மலர்
கிருஷ்ணகிரி
- எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது
- மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது.
கிருஷ்ணகிரி:
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி இருக்க வேண்டும். கர்நாடகா அரசு அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கும் போது, தமிழக மக்களுக்கு முதலஅமைச்சர் உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் தமிழக மக்கள் நலனைவிட இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என முடிவெடுத்துவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சீமான் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாதி வாரிய கணக்கெடுப்பு வேண்டும் என முதலில் தமிழ்பெருங்குடி ஆனந்தம் தான் பேசி, 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார். அதன் பின் சாதிவாரியாக கணக்கெடுப்பு வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் நான் ஆகியோர் போராடி வருகிறோம். அன்று முதல் இன்று வரை சாதிவாரிய கணக்கெடுப்பு பேசப்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரை இது குறித்து பேசுவார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோத நிறைவேற்றப்பட்டது. முதலில் ஆட்சியில் வேண்டாம், பாஜக தனது கட்சியில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தருமா. தேர்தல் வரும் போது மட்டும் நம் மீது பாசம், அக்கறை, பற்று, விலைவாசி உயர்வு போன்றவை ஞாபகம் வருகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் 1947ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1967ல் தான் ஆட்சியை பிடித்தது. அப்படித்தான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனது அடித்தளத்தை வளர்த்தி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வரும் போது, பிற கட்சியை சார்ந்தவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். காவிரி பிரச்சனையில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் முறையாக இல்லை. இரு மாநில அதிகாரிகள் சமமாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது. அதற்காக ஏன் பல ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்த வேண்டும்.
பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறிய பிறகு, அ.தி.மு.கவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததாக என்ற கேள்விக்கு, அழைப்பார்கள், நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம். கூட்டணிக்கு அழைப்பார்கள் இன்னும் நாள் உள்ளது. பிறகு தான் பேச வேண்டும். ககல்யான் விண்கலம் கடைசி நிமிடம் நிறுத்தம் தொடர்பான கேள்விக்கு, இந்தியா மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சியால் நமக்கு என்ன பயன். 28 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் இருப்பதாக பாஜகவினர் தான் சொன்னார்கள்.
கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு வழங்கியதாக நிதி அமைச்சர் பேசுகிறார். சாலையை முறையாக போடுங்கள். நாட்டில் பிச்சை எடுப்பது வளர்ச்சி இல்லை. பிச்சைக்காரன் இல்லாமல் இருப்பது தான் வளர்ச்சி. ஜி20 மாநாடு, காமன்வெல்த் போட்டிகள் நடந்த போது, பதாகைகள் வைத்து குடிசைகளை மறைத்தனர். ஒரே நாளில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்களை லாரியில் ஏற்றி வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். இவர்கள் பேச்சு எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. சந்திர மண்டலத்தில் குடியேறலாம் என்றால், முதலில் இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என யாரை முதலில் குடியேற்றுவீர்கள். உங்களை குடி அமர்த்த விட்டுவிட்டு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அமைதியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி எல்லாம் வீண் செலவு. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் வாக்கை இயந்திரத்தில் போட்டுவிட்டு, மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- விவகாரத்து தொடர்பான வழக்கில் தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அருண்குமார்(வயது39). விவசாயி. இவருக்கும் தருமபுரியை சேர்ந்த ஜான்சிராணி(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும ணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண்குமார், ஜான்சிராணியி–டம் இருந்து விவகாரத்து பெற்று விட்டார்.
கணவன்-மனைவி இருவ ரும் சம்பவத்தன்று தருமபுரி நீதிமன்றத்துக்கு ஜீவனாம்சம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ஆஜராக வந்துள்ளனர். அப்போது அருண்குமாருக்கும் ஜான்சிராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்சிராணியும், வக்கீல் விமல் என்பவரும் சேர்ந்து நீதிமன்ற வாளகத்தி–லேயே அருண்குமாரை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- ஓசூரில் தூய்மைப் பணிக்காக 30 பேட்டரி வாகனங்களை மேயர் சத்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மாநகர பகுதிகளின் தூய்மை பணிக்காக இயக்கப்பட வுள்ளது.
\கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது மண்டலம், பழைய ஏ.எஸ்.டி.சி அட்கோ வளாகத்தில் தனியார் துப்புரவு ஒப்பந்த நிறுவனம் சார்பில், 30 பேட்டரி வாகனங்கள் மாநகர பகுதிகளின் தூய்மை பணிக்காக இயக்கப்படவுள்ளது.
இந்த வாகனங்களை, மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், நாகராஜ், ஒப்பந்த உரிமையாளர் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
- ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வைய பொறியா ளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்காக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. கிருஷ்ணகிரி மத்திய அமைப்பு திட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் சாமுடி, ராஜேந்திரன், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசு தேவன், திட்ட செயலாளர் கருணாநிதி, ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செயலாளர் முனிரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், திட்ட பொரு ளாளர் முனிசாமி நன்றி கூறினார்.
இந்த போராட்டத்தின் போது, தினக்கூலி இ-டெ ண்டரை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளியை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங் கிட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு வி பத்து காப்பீடு உறுதிபடுத்திட வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையினை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
- குந்தாரப்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- சாலையிலேயே கழிவுநீர் செல்வதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தி.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் இருந்து வேப்பனப்பள்ளி சாலை யில் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளி கள் அமைந்துள்ளன. இந்த பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகிறார்கள். மேலும் வணிக வளாகங்க ளுக்கு நாள்தோறும் ஏராள மான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
மேலும் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்பனப்பள்ளி செல்லகூ டிய சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து செல்கிறது. வணிக வளா கங்கள், குடியிருப்பு பகுதி களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல கூடிய பொதுமக்கள் அவதிக் குள்ளாகிறார்கள். மேலும் மழை காலங்களில் அந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
சாலையிலேயே கழிவுநீர் செல்வதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட் டுள்ளது. ஆகவே ஆயிரக்க ணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவகள் வந்து செல்ல கூடிய குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்ப னப்பள்ளி செல்ல கூடிய பிரதான சாலையில், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக் கை வைத்துள்ளனர்.
- காவேரிப்பட்டினத்தில் காமராஜர் திறந்து வைத்த நூலகத்தை கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கப்பட்டது.
- டாக்டர் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் 1956-ம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், பெருந்தலை–வருமான காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் சிதலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலக கட்டிடத்தினை இடித்து விட்டு புதியதாக நூலகம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் காங்கி–ரஸ் எம்.பி. டாக்டர் செல்லக்–குமாரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து சுமார் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிதலமடைந்த காணப்படட நூலகத்தை புது பொலிவுடன் கட்டுவதற்காக பூமிபூஜை காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் தேவநாராயணன் தலைமை தாங்கினார். முன்னால் மாவட்டத் தலை வர் காசிலிங்கம், மாவட்டத் துணைத்தலைவர் சேகர், கலை இலக்கிய மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, எஸ்.சி., எஸ்.டி., பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர் குமார், வட்டார தலைவர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, முன்னாள் வட்டார தலைவர் ஆர்மி ராமன், முன்னாள் நகர தலைவர்கள் சுப்பிரமணி, பச்சப்பன்,சிறுபான்மை வட்டாரத் தலைவர் முஸ்தபா சேவா தள தலைவர் தேவராஜன், நகர செயலாளர் ஸ்ரீராம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சம்பத்குமார், சிவகுமார், கதிர்வேல், சுடர் வேல், பூபாலன், கணபதி, ஸ்ரீராமுலு, சுப்பையன், ராமராஜ், ஜெயபால், குணா, குருசாமி, கருணாமூர்த்தி சிவன் ஐயா, கவுரன் ஆசிரியர், மல்லிகா ராமன், மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட நூலகம் மீண்டும் புதுபொலியுடன் கட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் டாக்டர் செல்லக்குமார் எம்.பி.க்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
- புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
- அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அர.சக்கரபாணி நாளை ஓசூர் வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில், நாளை (சனிக்கிழமை) கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கவும், மீன் இறைச்சி கடைகள் உள்ளிட்ட கட்டு மான பணிகளை தொடங்கி வைக்கவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நாளை ஓசூர் வருகின்றனர்.
மேலும், திறன் மேம்பாட்டு நூலகம் உள்ளிட்டவை களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
- சரத்தை பீர்பாட்டிலாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினர்.
- வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு தொரக நகரைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் சரத் என்கிற லாலு (வயது23). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஓசூரை அடுத்த மத்திகிரி அருேக உள்ள மிடிகிரி பகுதியில் தங்கி உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் டிரைவர்களான சுனில் (31), பாரத் (28), திம்மசத்திரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (26) ஆகிய 3பேரும் சம்பவத்தன்று குடிபோதையில் சரத்திடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து சரத்தை பீர்பாட்டிலாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சரத் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
- கெலமங்கலம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா கெலமங்கலம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ், பைரமங்கலம் கிராமத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.
இதில் கெலமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் கலா தலைமை தாங்கி, விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். வேளாண் உதவி பொறியாளர் அக்பர் சொட்டுநீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து எடுத்துரைத்தார்.
துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், மத்திய, மாநில அரசுகளின் வேளாண்துறை சார்ந்த மானிய திட்டம் மற்றும் பாரம்பரிய வேளாண்மை குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் சுந்தர்ராஜ், கலைஞர் ஒருகிணைந்த வேளாண்மை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், இடுபொருட்கள், உபகரணங்கள், பண்ணைக் கருவிகள் குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா, உழவன் செயலியின் அவசியம் குறித்து விளக்கினார்.
மேலும், கிசான் கடன் அட்டை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தேன்கனிக்கோட்டை அருகே கவுரம்மாதேவி தேர் திருவிழா நடைபெற்றது.
- இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு.
தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே கும்மளாபுரம் கிராமத்தில் கவுரம்மா கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கும்மளாபுரம் கிராமத்தில் வீரபத்திரசாமி கோவில் அருகில் உள்ள கவுரம்மா தேவி கோவில் தேர்திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டு ஆண்டு காலமாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் மற்றும் கவுரம்மாதேவி தேர் திருவிழாயைட்டி கடந்த வினாயகர் சதுர்த்தி நாளில் கோவில் திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. தேர்திரு விழாவையொட்டி நவராத்திரி முதல் நாளில் சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவில் விநாயகர் மற்றும் கவுரம்மா தேவிக்கு தனிதனியாக தேர் அமைந்து 120 பேர் தேரை சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊரில் முழுவதும் ஊர்வலம் வந்தனர். பிறகு அருகில் கவுரம்மா ஏரியில் முதலில் விநாயகரையும் பிறகு கவுரம்மா சிலைகளை தண்ணீரில் கரைத்தனர். இந்த ஊரில் தவிர வேறு எங்கும் கவுரம்மா கோவில் இல்லை முன்னதாக இங்கு விசேஷ பூஜைகளும் 101 கிணற்றில் தண்ணீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேசம் செய்தனர்.
இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு. இந்த கிராமத்தில் 101 ஏரிகள், 101 குளங்கள் 101 கோயில்கள், 101 வில்வமரம், உள்ள இடம் என்று புராணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கவுரம்மா தேவின் உருவத்தை களிமண்ணால் சிறப்பு அலங்காரம் செய்து தங்கத்தாலி அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் தேவியின் களிமண் சிலையை மூழ்கடித்து 3 நாள் கழித்து அம்மன் தேவி சிலை கழுத்தில் இருந்த தங்கத்தாலி ஏரியில் மேலே மிதக்கும் இந்த தாலியை எடுத்து அம்மன் சன்னிதானத்தில் வைத்து கோவிலை பூட்டிவிடுவது வழக்கமாகும்.
இத்திருவிழாவில் மடாதிபதிகள், சுற்றுபுற பல கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு கர்நாடக ஆந்திர மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மீண்டும் கோவில் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருவண்ணாமலையில் 22ந்தேதி தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம் நடைபெறும் என்று மதியழகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
- வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை அண்ணா அறிவா லயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா வை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின்படி கழகத்தில் மொத்தம் 2 கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாக சேர்த்து ஒவ்வெரு வாக்குசா வடியிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தலைமை கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.
தலைவர் அறிவுரைப்படி சரிபார்க் கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளில் மேற்கு மண்டல வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
அதைத் தொடர்ந்து வடக்கு மண்டலம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்ட மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை ஒன்றியம் அருணாசலம் நகரில் உள்ள கலைஞர் திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நேரில் விவரங்களை தெரிவித்து அனைத்து தகவல்களையும் தெரிவித்து அதன்படி அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் தவறாமல் 22-ந் தேதி காலை 5 மணிக்கு தங்களின் பயணத்தை புறப்பட திட்டமிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காலை 8 மணிக்குள் திருவண்ணாமலை அருணாசலம் நகரில் கூட்டம் நடைபெறும் கலைஞர் திடலுக்கு சென்றடைய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் தவறாமல் அழைத்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பகுதியில் காவேரிப்பட்டினம் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
- கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்கா பொருட்களை சேலத்துக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது
காவேரிப்பட்டினம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பகுதியில் காவேரிப்பட்டினம் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வேகமாக வந்த காரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை திறந்து சோதனை செய்தபோது அதில் 515 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தன.
இதனையடுத்து காவேரிப்பட்டினம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குட்கா பொருட்களை கடத்தியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோ கர்சிங் (வயது 27), மதன்சிங் (19) என்பதும் அவர்கள் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்கா பொருட்களை சேலத்துக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது விசாரணை செய்து வருகின்றனர். குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.






