என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது
- சரத்தை பீர்பாட்டிலாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினர்.
- வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு தொரக நகரைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் சரத் என்கிற லாலு (வயது23). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஓசூரை அடுத்த மத்திகிரி அருேக உள்ள மிடிகிரி பகுதியில் தங்கி உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் டிரைவர்களான சுனில் (31), பாரத் (28), திம்மசத்திரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (26) ஆகிய 3பேரும் சம்பவத்தன்று குடிபோதையில் சரத்திடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து சரத்தை பீர்பாட்டிலாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சரத் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.






