என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம்
- மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அர.சக்கரபாணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஓசூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கையெ ழுத்திட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.






