என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஒசூரில் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
    • பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்று வருவதால் மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். இந்நிலையில் இச்சம்ப வங்களில் தொடர்புடை யவரை கைது செய்ய, அட்கோ சப் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசார ணையில், ஓசூர், பாகலூர், அட்கோ, மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்ப றியில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலம் ஆனந்தபூர் மா வட்டம் குந்தக்கல் அபேஸ்ந கர் பகுதியை சேர்ந்த ஷேக் நாம்தார் உசேன்(34) என்பது தெரிய வந்தது.

    இவர் மீது ஏற்கன வே, தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் நகைபறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வே று திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நி லையில், நீண்ட தேடுதலுக்கு பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் குண்டூரில் அவரை பிடித்த தனிப்படை போலீசார், நேற்று மாலை விசார ணைக்காக, ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள திருப்பதி மெஜஸ்டிக் பகுதிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ஷேக் நாம்தார் உசேன் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தின் போது, தான் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றிருந்த நிலையில், அதை காண்பிக்க செல்வதை போல் சென்றார். அப்போது திடிரென்று அதில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த, ஷேக் நாம்தார் உசேன் திடீரென சப்இன்ஸ்பெக்டர் வினோத், முதல் நிலை காவலர்கள் ராமசாமி, விழியரசு ஆகிய 3 பேரை, தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.

    இதையடுத்து தற்காப் புக்காக, சப்இன்ஸ்பெக்டர் வினோத், துப்பாக்கியால் ஷேக் நாம்தார் உசேனை சுட்டார். இதில், அவருக்கு வலது காலில் குண்டு அடிப்பட்டு அங்கே விழுந்தார். அவரது காலில் பாய்ந்த குண்டும் வெளியே வந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் மற்றும் போலீசார், காயம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் உட்பட 3 போலீசார் மற்றும் குண்ட டிப்பட்ட ஷேக் நாம்தார் உசேன் ஆகியோ ரை மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவம னையில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து ஓசூர் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்ப வம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மகேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு மஞ்சப்பை குறித்து கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசுகையில், பூமிக்கு தீமை தரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். பழைய மரபுபடி அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ரவி, பவுன் ராஜ், வாசவி, திவ்யா, மகா லட்சுமி, ஹசீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச் சூழல் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி செய்திருந்தார்.

    • ஓசூரில் கட்டுமான பணிகள் முழுமை அடையாத நிலையில் அரசுப்பள்ளி கட்டிடத்தை திறந்த தலைமையாசிரியை பெற்றோர், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கல்வி நிர்வாகம், தலைமையாசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபனப்பள்ளி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இதில் ஓடு வேய்ந்த பாழடைந்த கட்டிடத்தில் 120 மாணவர்கள் படித்து வந்த நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் முயற்சியால் ரூ. 32 லட்சம் மதிப்பில் புதிதாக பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி தொடங்கப் பட்டது. தற்போது பள்ளி வகுப்புக்கள், கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியின் தலைமையாசிரியை ஆக லலிதா என்பவர் கடந்த 2022- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், அவரது வருகைக்கு பின்னர் பள்ளியின் வளர்ச்சி தலைகீழாய் மாறிவிட்டதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கோபன பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மாணவர்கள் அதிகளவில் இந்த பள்ளியில் படித்து வந்த நிலையில், தலைமையாசிரியை செயல்பாடுகள் பிடிக்காமல், தற்போது 50 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கும், 40 சதவீதம் பேர் அருகில் உள்ள வேறு ஒர் அரசு பள்ளிகருக்கும் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 120 மாணவர்களில், 26 மாணவர்கள் மட்டுமே தற்போது இங்கு படிக்கின்றனர். இங்கு 4 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

    இந்த நிலையில், புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், கழிவறை, முன்பக்க மைதானம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மற்றும் பல்வேறு பணிகள் முடிவுறாத நிலையில், தலைமையாசிரியை லலிதா, கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட் சித்துறையினர் என யாருக்கும் எந்த வித தகவல்களையும் தெரிவிக்காமல், முன் அறிவிப்பின்றி திடீரென நேற்று கட்டிடத்தை திறந்தார்.

    இதனால் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளி மைதானம் சுத்தம் செய்யப்படாமல் கற்கள் குவிந்து காட்சியளித்தும், சுற்றுச்சுவர் இடிந்து விழும் சூழலில் உள்ள நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரையும் அழைக்காமல், ஏன் கட்டிடத்தை திறந்தீர்கள்? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியதால் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு பூட்டு போட்டு சமுதாய கூடத்திற்கு சென்றுவிட்டனர். இதுக்குறித்து கிராம மக்கள் கூறியதாவது;-

    பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி விழாக்கள், என எந்த நிகழ்ச்சிகளுக்கும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பெற்றோர்களிடம் எவ்வித தகவல்களையும் தகவல் தெரிவிக்காமல், அவரே தன்னிச்சையாக நடத்துகிறார் என்று கூறினர். இந்த பள்ளியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்ட கல்வி நிர்வாகம், தலைமையாசிரியை மீது உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளியை சிறந்த முறையில் இயங்கச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேயர் சத்யா தலைமையில் நடைபெற்றது
    • கவுன்சிலர் களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அம்ருத் திட்டம் 2.0 ன் கீழ் ரூ.574.96 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் விரிவான விளக்க கூட்டம், நேற்று மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமையில் நடைபெற்றது.

    துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் வழி முறைகள், திட்டத்திற்கான விதி முறைகள், திட்டம் தொடக்கம் மற்றும் நிறைவு பெறும் கால அவகாசம், பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாபு விரிவாக விளக்கி பேசினார்.

    மேலும், மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர் களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் பாபு மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம் ஆகியோர் விளக்கமளித்து பேசினர். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற் றப்பட உள்ளது என்றும், அடுத்த ( 2024) ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கி, 2027ஆம் ஆண்டுமார்ச் மாத இறுதியில் அதாவது 3 ஆண்டுகளில் முடிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

    இதில் மாநகராட்சி பொதுக்குழு தலைவர் மாதேஸ்வரன், நகரமைப்பு குழு தலைவர் அசோகா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • 3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.
    • வனத்துறையினர் விசாரணை

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி அடுத்த பச்சிக்கானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புது பேயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவர் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்று விட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை சென்று பார்த்த பொழுது ஆட்டு கொட்டகையில் இருந்த 9 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்து கிடந்தன. மேலும் படுகாயத்துடன் 3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இது குறித்த தகவலின் பெயரில் அங்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்ட பட்சிகானபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கன்னியப்பன்

    இது குறித்து அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவர்கள் உயிருக்கு போராடி கொண்டுள்ள 3 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து கே.ஆர்.பி அணை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்த நிலையில், தற்பொழுது மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.  

    • கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது.
    • அனைத்து திட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி, 

      கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் 2022-2023 - ஆம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், சமத்துவபுரம், நீலப்புரட்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொகுதி - 2, பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா திட்டம், ஆதிதிரா விடர் குடியிருப்பு களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், இருளர் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு செய்தல், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடை பெற்று வரும் பணிகள், சமூக பொருளா தார மேம்பா ட்டுத்திட்டம், தன்னிறைவு திட்டம், நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், அனைத்து திட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளான சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமான பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் தெரு விளக்கு போன்ற பொது மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் அருள்மொழி தேவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள டோரிப்பள்ளியை அடுத்த உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ட ராமப்பா (வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(47) என்ற மனைவியும், கிரி (23) என்ற மகனும், காவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சப்படி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார்.

    கிரிக்கும் வேறு நபருக்கும் தகராறு இருந்து வந்தது. எனவே, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் மீனாட்சியும், தங்கை காவ்யாவும் சூளகிரி போலீசில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காண்பிக்குமாறு புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    மேலும், கிரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பிய அவர்கள் நேற்றும் சூளகிரி போலீசாரை சந்தித்து விசாரித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

    தனது மகன் சாவு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காததால், மீனாட்சியும், அவரது மகள் காவ்யாவும் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். மனமுடைந்து போன மீனாட்சியும், காவ்யாவும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீப்போல் பரவியது.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்க முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மீனாட்சி, காவ்யா ஆகியோரின் உடல்களை எடுக்க விடாமல் தடுத்தனர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த், தாசில்தார் சக்திவேல், கிராம அலுவலர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உறவினர்களிடம், உங்கள் சந்தேகங்களை புகாராக எழுதி கொடுங்கள், நான் விசாரித்து போலீசார் கவன குறைவாக செயல்பட்டிருந்தால் ஒரே நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதன்பின்னர் உறவினர்கள் 2 பேரின் உடல்களை போலீசார் எடுத்து செல்ல அனுமதித்தனர். அதன்பின்பு போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன் விபத்தில் இறந்ததால் துக்கம் தாங்காமல் தாய், தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    • ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர்.
    • விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயக்கோட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி சென்ற காரும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது.

    நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பலியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் காமராஜ் (29) கார் டிரைவர் ஆவார்.

    அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது அண்ணன் கிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (37) மாரடைப்பால் உயிர் இழந்தார். அதே போல விபத்தில் பலியான புனித்குமார் (23), கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவார். அவரும் டிரைவர் ஆவார்.

    இதே போல விபத்தில் பலியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நராயண் சேத்தி (35), அசாம் மாநிலத்தை சேர்ந்த குஞ்சா ராய் (24), நிக்லேஷ் (25), தாலு (26), விமல் (47) ஆகிய 5 பேரும் ஓசூர் அருகே அக்கொண்டப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அட்டை பெட்டிக்கு ஒட்டப்படும் பேஸ்ட் உற்பத்தி செய்ய கூடிய அந்த நிறுவனம் 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    அங்கு 15 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை அருகே நடந்த விபத்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய வட மாநில ஊழியர்கள் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்தூர் அருகே மர்மான முறையில் இறந்த கிடந்த மாணவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இவர் கடந்த 4 நாட்களாக விடுமுறையையொட்டி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் படித்து வந்தார்.

    இவர் கடந்த 4 நாட்களாக விடுமுறையையொட்டி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் மத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், மாணவி வயிற்று வலியின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பினர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிளஸ்-1 மாணவி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேன்கனிக்கோட்டை அருகே தசரா விழாவை முன்னிட்டு கிராம தேவதைகளின் உற்சவ விழா நடைபெற்றது.
    • தேங்காய்களை கட்டிவிட்டு அதை அம்பு விட்டு உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மணியம் பாடி கிராமத்தில் ஆண்டு தோறும் தசரா திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதை களின் உற்சவ விழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தசரா விழா முன்னிட்டு நேற்று கிராம தேவதைகளின் உற்சவம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.

    மணியம்பாடி மெலூர் ஒட்டர்பாளையம் ஆகிய கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்கவும், மக்கள, நொடியின்றி வாழவும் கிராம தேவதை–களுக்கு திருவிழா நடத் தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு மணியம்பாடியில் உள்ள கிராம தேவதைகளான பட்டாளம்மன், மாரி–யம்மன், மெலூர் கிரா–மத்தில் சிக்கம்மா, தொட்டம்மா, பசுவேஸ்வர சாமி, வீரபத்திர சாமி, பட்டா ளம்மன், ஓம்காளியம்மன், மாரியம்மன், வெங்கடராம சுவாமி, ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள திம்ம–ராய சாமி, சென்றாய சாமி, வீரபத்திர சாமி உட்பட பல்வேறு கிராம தேவதைகளை அலங்க–ரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மேள, தாளங்கள் முழங்க அலங்கரிக்கபட்ட எருதுகளுடன் ஊர்வலமாக தோள்களில் சுமந்தவாறு புறப்பட்ட பக்தர்கள் மணியம்பாடி கிராமத்திற்கு வந்தடைந்தனர்.

    அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் அனைத்து கிராம தேவதை களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் பாரம்பரிய நடமாடினர். இதைத்தொடர்ந்து மரக்கிளைகள் கொண்டு வந்து அந்த மரங்களின் கிளைகளின் தேங்காய்களை கட்டிவிட்டு அதை அம்பு விட்டு உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர் இந்த விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொன்டனர்.

    • மத்தூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

     கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த குட்டூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எம்.ஜி.ஆர். சேக்கினாம் பட்டியில்200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அந்த பகுதியில் குடிநீர் வசதியில்லாததால், இதற்காக அப்பகுதி கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பள்ளி பஸ்கள் மற்றும் நகரப் பஸ்கள் செல்ல முடியாமல் சுமார் 2 மணி நேரம் போக்கு–வரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் குடிநீர் வசதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று அவர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து குட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளுக்கும், மத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களுக்குள் குடிநீர் வசதி செய்து தருவதாக அவர் கூறினார்.

    பேச்சுவார்த்தை முடிந்த பின்பு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருவண்ணாமலை கோர விபத்தில் பலியான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன
    • கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது சம்பவம்

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பகுதியில் திருவண்ணா மலை பெங்க ளூரு தேசிய நெடுஞ்சா லையில் பெங்க ளூரு நோக்கி சென்ற காரும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது.

    நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பலியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் காமராஜ் (29) கார் டிரைவர் ஆவார்.

    அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது அண்ணன் கிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (37) மாரடைப்பால் உயிர் இழந்தார். அதே போல விபத்தில் பலியான புனித்குமார் (23), கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவார். அவரும் டிரைவர் ஆவார்.

    இதே போல விபத்தில் பலியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நராயண் சேத்தி (35), அசாம் மாநிலத்தை சேர்ந்த குஞ்சா ராய் (24), நிக்லேஷ் (25), தாலு (26), விமல் (47) ஆகிய 5 பேரும் ஓசூர் அருகே அக்கொண்டப் பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அட்டை பெட்டிக்கு ஒட்டப்படும் பேஸ்ட் உற்பத்தி செய்ய கூடிய அந்த நிறுவனம் 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    அங்கு 15 தொழிலா ளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர். .

    திருவண்ணாமலை அருகே நடந்த விபத்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய வட மாநில ஊழியர்கள் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×