என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்த விளக்க கூட்டம்
    X

    பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்த விளக்க கூட்டம்

    • மேயர் சத்யா தலைமையில் நடைபெற்றது
    • கவுன்சிலர் களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அம்ருத் திட்டம் 2.0 ன் கீழ் ரூ.574.96 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் விரிவான விளக்க கூட்டம், நேற்று மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமையில் நடைபெற்றது.

    துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் வழி முறைகள், திட்டத்திற்கான விதி முறைகள், திட்டம் தொடக்கம் மற்றும் நிறைவு பெறும் கால அவகாசம், பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாபு விரிவாக விளக்கி பேசினார்.

    மேலும், மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர் களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் பாபு மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம் ஆகியோர் விளக்கமளித்து பேசினர். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற் றப்பட உள்ளது என்றும், அடுத்த ( 2024) ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கி, 2027ஆம் ஆண்டுமார்ச் மாத இறுதியில் அதாவது 3 ஆண்டுகளில் முடிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

    இதில் மாநகராட்சி பொதுக்குழு தலைவர் மாதேஸ்வரன், நகரமைப்பு குழு தலைவர் அசோகா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×