என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த பள்ளி மாணவி
- மத்தூர் அருகே மர்மான முறையில் இறந்த கிடந்த மாணவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் கடந்த 4 நாட்களாக விடுமுறையையொட்டி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் படித்து வந்தார்.
இவர் கடந்த 4 நாட்களாக விடுமுறையையொட்டி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் மத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், மாணவி வயிற்று வலியின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பினர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிளஸ்-1 மாணவி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






