என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் வசதி கேட்டு  பொதுமக்கள் சாலை மறியல்
    X

    குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    • மத்தூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த குட்டூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எம்.ஜி.ஆர். சேக்கினாம் பட்டியில்200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அந்த பகுதியில் குடிநீர் வசதியில்லாததால், இதற்காக அப்பகுதி கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பள்ளி பஸ்கள் மற்றும் நகரப் பஸ்கள் செல்ல முடியாமல் சுமார் 2 மணி நேரம் போக்கு–வரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் குடிநீர் வசதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று அவர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து குட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளுக்கும், மத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களுக்குள் குடிநீர் வசதி செய்து தருவதாக அவர் கூறினார்.

    பேச்சுவார்த்தை முடிந்த பின்பு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×