search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணத்தில் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட நூலகத்தை மீண்டும் புதுபொலிவுடன் கட்டுவதற்கான பூமி பூஜை செல்லக்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
    X

    புதுபொதுலிவுடன் நூலகத்தை கட்ட பூமிபூஜையை செல்லக்குமார் எம்.பி. தொடங்கி வைத்த காட்சி.

    காவேரிப்பட்டணத்தில் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட நூலகத்தை மீண்டும் புதுபொலிவுடன் கட்டுவதற்கான பூமி பூஜை செல்லக்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்

    • காவேரிப்பட்டினத்தில் காமராஜர் திறந்து வைத்த நூலகத்தை கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கப்பட்டது.
    • டாக்டர் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் 1956-ம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், பெருந்தலை–வருமான காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் சிதலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலக கட்டிடத்தினை இடித்து விட்டு புதியதாக நூலகம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் காங்கி–ரஸ் எம்.பி. டாக்டர் செல்லக்–குமாரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.

    இதனையடுத்து கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து சுமார் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிதலமடைந்த காணப்படட நூலகத்தை புது பொலிவுடன் கட்டுவதற்காக பூமிபூஜை காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது.

    இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் தேவநாராயணன் தலைமை தாங்கினார். முன்னால் மாவட்டத் தலை வர் காசிலிங்கம், மாவட்டத் துணைத்தலைவர் சேகர், கலை இலக்கிய மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, எஸ்.சி., எஸ்.டி., பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர் குமார், வட்டார தலைவர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, முன்னாள் வட்டார தலைவர் ஆர்மி ராமன், முன்னாள் நகர தலைவர்கள் சுப்பிரமணி, பச்சப்பன்,சிறுபான்மை வட்டாரத் தலைவர் முஸ்தபா சேவா தள தலைவர் தேவராஜன், நகர செயலாளர் ஸ்ரீராம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சம்பத்குமார், சிவகுமார், கதிர்வேல், சுடர் வேல், பூபாலன், கணபதி, ஸ்ரீராமுலு, சுப்பையன், ராமராஜ், ஜெயபால், குணா, குருசாமி, கருணாமூர்த்தி சிவன் ஐயா, கவுரன் ஆசிரியர், மல்லிகா ராமன், மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் கடந்த பல ஆண்டுகளாக காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட நூலகம் மீண்டும் புதுபொலியுடன் கட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் டாக்டர் செல்லக்குமார் எம்.பி.க்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    Next Story
    ×