என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கடந்த 9-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார்.
    • அதே பகுதியை சேர்ந்த திருமலை (வயது 20) என்ற வாலிபர்தான் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக மாணவியின் தாய் புகார் செய்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகேயுள்ள எர்ரஅள்ளி பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் தருமபுரியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து

    இவர் கடந்த 9-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார். அவரை பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமலை (வயது 20) என்ற வாலிபர்தான் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக மாணவியின் தாய் புகார் செய்துள்ளார். இந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • குடும்பத்திலும் சில பிரச்சினைகள் இருந்துள்ளன.
    • மனம் உடைந்த ரத்னகுமார் சம்பவத்தன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பி.திப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் ரத்னகுமார் (வயது 19). கூலி தொழிலாளியான ரத்னகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்திலும் சில பிரச்சினைகள் இருந்துள்ளன. இதில் மனம் உடைந்த ரத்னகுமார் சம்பவத்தன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சமீபத்தில் தினேஷின் மோட்டார்சைக்கிள் காணாமல் போனது.
    • தினேஷ் உள்ளிட்ட அனைவரும் இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கியதில் சீனிவாசன் காயமடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்.இவரது மகன் சீனிவாசன் (வயது 17).கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் கிட்டம்பட்டியை சேர்ந்த தினேஷ்.

    சமீபத்தில் தினேஷின் மோட்டார்சைக்கிள் காணாமல் போனது. இதை சீனிவாசன்தான் திருடி யுள்ளார் என்று தினேஷ் சந்தேகப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படையப்பா, மஞ்சு, அகில், ராம்ராஜ் ஆகியோர் சந்தித்து மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து விசாரித்துள்ளனர்.

    தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று சீனிவாசன் மறுத்துள்ளார்.அப்போது தினேஷ் உள்ளிட்ட அனைவரும் இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கியதில் சீனிவாசன் காயமடைந்தார்.

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சீனி வாசன் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் தினேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராம்ராஜை கைது செய்தனர்.

    • மூலப் பொருட்களான களிமண், மணல் உள்ளிட்டவற்றை ஏரிகளில் எடுப்பதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதி வழங்க வேண்டும்.
    • புதிய அரிசியை புதுப்பானையில் பொங்க லிட களி மண்ணால் ஆன புது பானை, புது அடுப்பு ஆகியவற்றை எங்களிடம் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    பொங்கலுக்கு அரசே மண்பாண்டம், அடுப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், மண்பாண்ட தொழி லாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எங்கள் குல தொழிலாளர்கள், மண்பாண்டம், அடுப்பு செய்ய தேவைப்படும் மூலப் பொருட்களான களிமண், மணல் உள்ளிட்டவற்றை ஏரிகளில் எடுப்பதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதி வழங்க வேண்டும்.அதுபோல் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருவது போல், வரும் ஆண்டில் புதிய அரிசியை புதுப்பானையில் பொங்க லிட களி மண்ணால் ஆன புது பானை, புது அடுப்பு ஆகியவற்றை எங்களிடம் அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கினால், அந்தந்த பகுதிகளில் வாழும் மண்பாண்ட தொழி லாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும். இதற்கு அரசு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சட்டம் -ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை கைது செய்திட மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
    • 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களையும், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து சட்டம் -ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை கைது செய்திட மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக வேட்டை நடத்தி, பொதுமக்களுக்கு இடையூறாகவும், சட்டம் - ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக 63 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் கொலை, கொலை முயற்சி, அடி-தடி மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளும், வரலாற்று பதிவேட்டில் கண்காணிக்கப்படும் பழைய குற்றவாளிகளும் அடங்குவார்கள்.

    • தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.
    • வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசால் தேர் பவனி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றி யத்திற்குட்பட்ட புஷ்பகிரி கிராமத்தில் உள்ள குழந்தை தெரசால் ஆலயத்தின், 8-ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    அன்று முதல் தினமும் மாலை 6- மணிக்கு ஜெப மாலையும், வேண்டுதல் தேர் பவனியுடன் திருப்பலி நிகழ்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் காலை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மாலை 6- மணியளவில் வான வேடிக்கைகளுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசால் தேர் பவனி நடைபெற்றது. இதனை, சுண்டம்பட்டி பங்குத்தந்தை ஜார்ஜ், மந்தரித்து துவக்கி வைத்தார். இந்த தேர்பவனியில் புஷ்பகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுபேதார் மேடு மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சென்னை, சேலத்தில் கிரிக்கெட் அகாடமிகள் செயல்பட்டு வருகின்றன.
    • ஒசூர் அகாடமி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.

    ஓசூர்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன. இளம் வீரர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது. 


    இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இங்குள்ள மைதானத்தில் மொத்தம் 8 ஆடுகளங்கள் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பயிற்சி முகாம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடன் தொல்லை அதிகரித்து சிவக்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
    • தூக்கில் பிணமாக தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தனர்.

    சூளகிரி,

    தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சிவக்குமார் (வயது50). இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது45). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சிவக்குமார் கடந்த 15 வருடங்களுக்கு முன்பே சூளகிரி மில்லத்நகர் பகுதிக்கு வந்து குடியேறி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் மளிகை கடை நடத்தி வந்தார்.

    கொஞ்சம், கொஞ்சமாக மளிகை கடை தொழிலில் முன்னேற்றம் அடைந்த சிவக்குமார் பின்னர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டார்.

    இதற்காக சிவக்குமார் பலரிடமும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடன் தொல்லை அதிகரித்து சிவக்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில் தனது மகள்கள் இருவரையும் கோயம்புத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்துள்ளார்.

    இன்று காலை அவரது மளிகைக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் கடை சாவியை வாங்குவதற்காக சிவக்குமாரின் வீட்டுக்கு சென்றனர். அப்போது சிவக்குமாரும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் தூக்கில் பிணமாக தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் சிவக்குமாரின் வீட்டில் அவர்கள் சோதனையிட்டபோது சிவக்குமார் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் கடன் நெருக்கடி காரணமாகவே தாங்கள் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    மேலும் கடன் தொல்லையால் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து உருக்கமுடன் பல்வேறு தகவல்களை அதில் எழுதியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

    2 குழந்தைகளை விட்டுவிட்டு மனைவியுடன் தொழிலதிபர் மேற்கொண்ட துயர முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முரளி சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
    • பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் முரளி (வயது 19). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் முரளியை காரில் அழைத்து சென்றனர். மது குடிப்பதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவர்கள் அலசநத்தம் சாலையில் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் உள்ள தனியார் லே-அவுட்டிற்கு சென்றனர்.

    அங்கு மதுபாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்து வைத்த அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து முரளியை சரமாரியாக வெட்டினார்கள்.

    இதில் கழுத்து உள்பட உடலில் 13 இடங்களில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதனால் முரளி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.இதையடுத்து அவரை கொலை செய்த 2 பேரும் காரில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முரளி பிணமாக கிடந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் இது குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் உதயகுமார் (32). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 28.2.2022 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    அந்த கொலை வழக்கில் தற்போது கொலையாகி உள்ள முரளி, முதல் குற்றவாளியாக போலீசாரால் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் முரளி சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் தான் அவரை, அந்த நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். எனவே பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

    மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது.
    • பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது- சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது.

    இந்த கன மழையால் கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக கிருஷ்ணகி 5 ரோடு ரவுண்டானா, பெங்களூரு சாலையில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது-. இந்த மழையால் கிருஷ்ணகிரி நகரிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் இரவு குளிர்ந்த காற்று வீசியது.

    நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாரூர் - 7.40, பெனுகொண்டாபுரம், நெடுங்கல்- 5.20, கிருஷ்ணகிரி - 1.80, ஊத்தங்கரை- 1.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே திடீரென அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.

    தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகர், அன்னசாகரம், நெசவாளர் காலனி பகுதி மற்றும் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, பென்னாகரம், செட்டிகரை, சோளைக்கொட்டாய், ஒடசல்பட்டி கூட்ரோடு, கடத்தூர், மொரப்பூர், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் பேருந்துகளுக்கு செல்லும் மக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் மழை இல்லாமல் வெப்பம் வீசி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று மாலை கனமழை பெய்தது.

    • பெட்ரோல் நிரப்பப்பட்டு திரியுடன் 4 பெட்ரோல் குண்டுகள் கிடந்தது.
    • கண்காணிப்பு காமிராக்களை காவேரிப்பட்டணம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெகதாப்பை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 42). பா.ஜனதா கட்சி பிரமுகர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இவருக்கு காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பு நேற்று மாலை பெட்ரோல் நிரப்பப்பட்டு திரியுடன் 4 பெட்ரோல் குண்டுகள் கிடந்தது. இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு இவரது வீட்டின் வாசல் அருகில் 4 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களும், ஒரு பெட்ரோல் நிரப்பப்படாத மதுபாட்டிலும் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவரது வீட்டின் அருகில் பெட்ரோல் குண்டுகளை போட்டு சென்றது யார்? என தெரியவில்லை.

    இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை காவேரிப்பட்டணம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகள் வீசினர்.

    இதனால் பெரும்பர பரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பா.ஜ.க. பிரமுகர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சேமிப்பு கணக்கு மற்றம் இன்சூரன்ஸ் பாலிசிகளை துவக்கி கொள்ளலாம்.
    • “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்” கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அஞ்சல் துறையின் சார்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வார விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, இன்று உலக அஞ்சல் தினம், 10-ந் தேதி நிதி வலுவூட்டல் நாள், 11-ந் தேதி தபால்தலை தினம், 12-ந் தேதி தபால் தினம், 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினம் என விழா கொண்டாடப்படுகிறது.அதன்படி, 10-ந் தேதி நடைபெறும் நிதி வலுவூட்டல் நாளில் அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் அந்த முகாம்களிலும் அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் சேமிப்பு கணக்கு மற்றம் இன்சூரன்ஸ் பாலிசிகளை துவக்கி கொள்ளலாம்.

    11-ந்தேதி தபால் தலை தினத்தன்று பள்ளி மாணவ, மாணவிகள் தபால் தலை கணக்குகளை தொடங்கலாம். மேலும், தங்களது புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு சென்று ரூ.300 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினத்தன்று அஞ்சலகங்களில் ஆதார் முகாம் நடைபெறும். மக்கள் இந்த ஆதார் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் "தபால்காரரும் தாத்தா பாட்டியும்" என்ற பெயரில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் 60 வயதிற்கு மேற்பட்ட தனி நபர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ராணு வீரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்கள் அல்லது தபால் காரர்களை அணுகி "மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்" கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×