என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24.11.2019 அன்று அந்த சிறுமிக்கு தமிழ் எழுத்து பயிற்சி சொல்லி கொடுப்பதாக பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறைக்கு, அப்பள்ளியின் தாளாளரான குருதத் (வயது 61) என்பவர் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தை, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தில், குருதத்தை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு வழங்கினார்.

    அந்த தீர்ப்பில், சிறுமியை அறையில் அடைத்து வைத்த குற்றத்திற்காக தாளாளர் குருதத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார். 

    • சமூகமத நல்லிணக்க அற போராட்டம் நடைபெற்றது.
    • தோழமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், ம.தி.மு.க, கமுனியூஸ்டு சி.பி.எம், தி.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் இணைந்து விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சதீஸ் (எ) சேட்டு மற்றும் மூர்த்தி (கிழக்கு) ஆகியோர் தலைமையில் சமூகமத நல்லிணக்க அற போராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர்கள் மாது (வடக்கு) தனஞ்செயன் (தெற்கு ) ,விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் முனிராவ், ஊடக மற்றும் செய்தி பிரிவு மாநிலத் துணை செயலாளர் அம்பேத்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளஞ்சூரியன் (எ) லட்சுமணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மசூத் அஹமது, செல்வராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி செந்தில் உள்ளிட்ட தோழமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக நாகசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இருவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள அகரம் ராமர்கொட்டாய் பகுதியில் உள்ள சாமுண்டீஸ்வரி வன பகுதியில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக நாகசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவசந்தர் மற்றும் போலீசார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டர். அப்பொழுது கோவிந்தசாமி என்பது வாழைத்தோட்டத்தில் சுமார் 5 -க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் 10 அடி உயரத்தில் வளர்க்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.

    பின்னர் இது குறித்து விசாரணை நடத்தியதில் ராமர் கொட்டாயை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் பழனி வயது (25), அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகன் சக்திவேல் வயது (21) ஆகிய இருவரை நாகரசம்பட்டி போலீசார் கைது செய்து, கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மாணவ மாணவியர், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஓசூர் ரோஸ், எலைட் ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முகாமில், டாக்டர் வைஷ்ணவி மற்றும் டாக்டர் ரம்யா மாணவ மாணவியருக்கு பரிசோதனைகள் நடத்தி மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

    முன்னதாக சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, கல்லூரியின் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கவிஞர் மணிமேகலை கலந்து கொண்டு பேசினார்.

    கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், ஆடிட்டர் பாலசுந்தரம், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், தமிழ்த்துறை பேராசிரியர் வெங்கடேசன், ரோட்டரி சங்க துணை ஆளுனர் தாட்சாயணி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் பேசினார்கள். மாணவ மாணவியர், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 முஸ்லிம் ஜோடிகளுக்கு கடந்த 6-ந் தேதி இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான டி.மதியழகன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, மிலாடி நபி விழாக்குழு சார்பில், 13-வது ஆண்டாக 5 முஸ்லிம் ஜோடிகளுக்கு கடந்த 6-ந் தேதி இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    அந்த ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மிலாடி நபி விழாக்குழு தலைவரும், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினருமான அஸ்லம் ரகுமான் ஷெரீப் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரியாஸ், ஆஷாத், அஸ்ரப், அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிலாடி நபி கமிட்டி உறுப்பினர் ஜாமிர் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான டி.மதியழகன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

    பின்னர், ஒரு ஜோடிக்கு, 1 லட்சம் வீதம் ஐந்து ஜோடிகளுக்கு, ரூ.5 லட்சம் மதிப்பில் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள் அடங்கிய திருமண சீர்வரிசையையும் வழங்கினார். நிகழ்ச்சியையொட்டி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

    இதில், கிழக்கு மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், சுன்னத் ஜமாத் கமிட்டி தலைவர் கவுஸ் ஷெரிப், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கோவிந்தசாமி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சித்ரா சந்திரசேகர், நாகராஜ் மற்றும் ஒன்றிய, பேரூர் தி.மு.க. செயலாளர்கள், நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
    • சிவப்பா மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனை பார்த்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார்

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ராமசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா (வயது46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த தம்பதிகள் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அனைவரும் தனித்தனியாக படுத்து இருந்தனர்.

    அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சிவப்பா மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனை பார்த்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சல் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மஞ்சுளாவுக்கு கை, கால் உள்ளிட்ட பகுதியில் கொப்பளம் ஏற்பட்டது.

    இது பற்றி தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்த மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மின்னல் தாக்கி இறந்த சிவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எனது அண்ணன் உதயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.
    • எனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக முரளியை தீர்த்து கட்ட திட்டமிட்டேன்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை முரளி (வயது 20). கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). இவர்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முரளியை சிலர் காரில் அழைத்து சென்றனர். இந்த நிலையில் அவர் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் சர மாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இந்த கொலை தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:&

    ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் உதயகுமார் (32). ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த 28.02.2022 அன்று அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி முரளியை (தற்போது கொலை செய்யப்பட்டவர்) கைது செய்தனர். அவர் அந்த வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முரளி, ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தான் முரளி கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணை யில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதயகுமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளியை தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய ஓசூர் அந்திவாடி நாகராஜ் மகன் சரவணன் (31), ஒன்னுப்பள்ளி மாதேஷ் (28), கொரட்டகிரி ரகு (21), தொட்டபிளி முத்திரை நவீன்குமார் (21), திம்மசந்திரம் மதன்குமார் (25), குருப்பட்டி நவீன்குமார் (20), மிடிகிரிப்பள்ளி சுனில் (29), பரத் (27) ஆகிய 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கைதான சரவணன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது அண்ணன் உதயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் முரளி முதல் குற்றவாளி ஆவார். அவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த முரளி, ஜாமீனில் வெளியே வந்த தகவல் அறிந்தேன்.எனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக முரளியை தீர்த்து கட்ட திட்டமிட்டேன். அதன்படி மது குடிக்க அவனை அழைப்பது போல அழைத்து வந்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தோம். இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான வர்களிடம் இருந்து 4 வீச்சரிவாள்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

    • உலக மனநல தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
    • ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா கலந்து கொண்டு பேசினார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி சார்பில், உலக வீடற்றோர் தினம் மற்றும் உலக மனநல தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

    இதையொட்டி ஓசூர் அண்ணாமலைநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா கலந்து கொண்டு பேசினார்.

    அந்த இல்லத்தை பார்வையிட்டு தங்குமிட வசதி, அங்கு பெண்கள் மேற்கொள்ளும் பணிகள் ஆகிவற்றையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு மருத்துவ முகாமினையும், சத்யா தொடங்கி வைத்தார்.

    இதில்துணை மேயர் ஆனந்தய்யா, மாநகரா ட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன், மாநகர நல அலுவலர் அஜிதா, மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மாநகராட்சி பொறியாளர்கள்,மாமன்ற உறுப்பினர் யசஷ்வினி மோகன், சமூக சேவகி ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இதனால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • தனியார் நிறுவனம் அண்டை மாநிலத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    கிருஷ்ணகிரி, 

    ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 860 பெண் பணியாளர்களை திரும்ப அனுப்ப வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாரந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் அதன் தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கெலமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டு, செல்போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை மூலம் 18 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு படித்த இளம் பெண்கள் ஆண்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து சிறப்பு ரெயில் மூலம் 860 பெண்கள் அழைத்து வரப்பட்டு பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதனால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மனித வளம் நிறைந்த தமிழ்நாட்டில் படித்த இளம் பெண்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் அந்த தனியார் நிறுவனம் ஆட்களை அழைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

    அழைத்து வரப்பட்ட 860 பெண் பணியாளர்களை திரும்ப அனுப்ப வேண்டும், உள்ளூர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    மேலும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு கொள்கை 18 வயது முதல் 21 வயது வரை மாற்றி 22 வயது வரை உயர்த்த வேண்டும். இனி வெளிமாநிலத்தில் இருந்து மக்களை பணி அமர்த்த மாட்டோம் என்கிற முடிவை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும், திமுக தேர்தல் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலைவாய்ப்பு என்கிற சட்டம் கொண்டு வருவோம் என அறிவித்துள்ள நிலையில், தனியார் நிறுவனத்தின் இந்த முடிவு அரசுக்கு எதிரானது.

    எனவே பணியமர்த்தப்பட்ட 860 பெண் பணியாளர்களை திரும்ப அனுப்பிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து ஆசிரியர்களுக்கும், எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ மூன்று நாள் பயிற்சி நேற்று துவங்கியது.
    • பயிற்சியின் கருத்துருக்கள் மாணவரிடம் கொண்டு செல்வதில் ஆசிரியர் என்பவர் ஒரு கட்டமைப்பாளராக விளங்க வேண்டும் என்றும் கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும், எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ மூன்று நாள் பயிற்சி நேற்று துவங்கியது.

    கிருஷ்ணகிரியில், புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் ஷமீம் துவக்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் பயிற்சியின் கருத்துருக்கள் மாணவரிடம் கொண்டு செல்வதில் ஆசிரியர் என்பவர் ஒரு கட்டமைப்பாளராக விளங்க வேண்டும் என்றும் கூறினார்.

    பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பார்வதி மற்றும் மயில்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பயிற்சி ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வராசு, சீனிவாசன், தமிழ்செல்வி மற்றும் வட்டார வள மேற்பார்வையாளர் அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில், 383 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

    • ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தங்க வைத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • முதியோர் காப்பகத்தில், நகரமன்ற தலைவர் பரிதாநவாப் தலைமையில் உலக வீடற்றோர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி யில் வருடந்தோறும் அக்டோபர் 10ம் தேதியன்று உலக வீடற்றோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நகராட்சி பகுதியில் சாலை யோரம் வசிக்கும் தனிநபர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடு இல்லாமல் வசிப்பவர்களை மீட்டு ராசுவீதியில் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தங்க வைத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு ராசுவீதியில் உள்ள முதியோர் காப்பகத்தில், நகரமன்ற தலைவர் பரிதாநவாப் தலைமையில் உலக வீடற்றோர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

    அப்போது அங்குள்ள முதியோர்களுக்கு நகர மன்ற தலைவர் மதிய உணவை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் நாகராட்சி ஆணையர் (பொ) சரவணன், மருத்துவர் இனியள் மண்டோதரி, நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார், செழியன், மேலாளர் மகேஸ்வரி, கனல் சுப்பிரமணி, மேற்பார்வையாளர் ரேஷ்மா இதாயத், மாதேஷ், வினித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போன நிலையில் தற்பொழுது 23 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது.
    • தென்னை மரங்களில் இலை கருகல் நோய் தாக்குதலால் போதிய தென்னை விளைச்சல் இல்லாமல் தற்பொழுது குத்தகைதாரர்களும் பெரும் நஷ்டம்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிர் செய்து வருகின்றனர். இந்த தென்னை மரத்தில் கிடைக்கும் தேங்காய்கள், ஓலை, தென்னை மட்டை, தேங்காய் மட்டை உள்ளிட்டவைளைக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொள்முதல் விவசாயிகள் இருந்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தென்னந்தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை குத்தகை பெற்று அந்த குத்தகையின் மூலம் தேங்காய் வெட்டி அதனை மொத்தமாக கொண்டு வந்து தேங்காய் மண்டியில் உரித்து தேங்காய்களை ரகம் பிரித்து அதனை மும்பை, கல்கட்டா, நாகலாந்து, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்வது வழக்கம்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போன நிலையில் தற்பொழுது 23 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விலை போவதாகவும், இதனால் ஒவ்வொரு விவசாயிகளிடமும் சுமார் 500 முதல் 1000 டன் தேங்காய்கள் தற்பொழுது தேக்கமாக உள்ளதாகவும், மேலும் இந்த பகுதியில் மட்டும் சுமார் 10,000 டன் தேங்காய்கள் தேக்கத்தில் இருப்பதால் விவசாயிகள் மற்றும் தென்னை வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    மேலும் தற்பொழுது தென்னை மரங்களில் இலை கருகல் நோய் தாக்குதலால் போதிய தென்னை விளைச்சல் இல்லாமல் தற்பொழுது குத்தகைதாரர்களும் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

    ×