என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்"

    • 5 முஸ்லிம் ஜோடிகளுக்கு கடந்த 6-ந் தேதி இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான டி.மதியழகன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, மிலாடி நபி விழாக்குழு சார்பில், 13-வது ஆண்டாக 5 முஸ்லிம் ஜோடிகளுக்கு கடந்த 6-ந் தேதி இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    அந்த ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மிலாடி நபி விழாக்குழு தலைவரும், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினருமான அஸ்லம் ரகுமான் ஷெரீப் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரியாஸ், ஆஷாத், அஸ்ரப், அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிலாடி நபி கமிட்டி உறுப்பினர் ஜாமிர் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான டி.மதியழகன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

    பின்னர், ஒரு ஜோடிக்கு, 1 லட்சம் வீதம் ஐந்து ஜோடிகளுக்கு, ரூ.5 லட்சம் மதிப்பில் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள் அடங்கிய திருமண சீர்வரிசையையும் வழங்கினார். நிகழ்ச்சியையொட்டி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

    இதில், கிழக்கு மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், சுன்னத் ஜமாத் கமிட்டி தலைவர் கவுஸ் ஷெரிப், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கோவிந்தசாமி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சித்ரா சந்திரசேகர், நாகராஜ் மற்றும் ஒன்றிய, பேரூர் தி.மு.க. செயலாளர்கள், நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×