என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ மூன்று நாள் பயிற்சி தொடக்கம்
- அனைத்து ஆசிரியர்களுக்கும், எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ மூன்று நாள் பயிற்சி நேற்று துவங்கியது.
- பயிற்சியின் கருத்துருக்கள் மாணவரிடம் கொண்டு செல்வதில் ஆசிரியர் என்பவர் ஒரு கட்டமைப்பாளராக விளங்க வேண்டும் என்றும் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும், எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ மூன்று நாள் பயிற்சி நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரியில், புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் ஷமீம் துவக்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் பயிற்சியின் கருத்துருக்கள் மாணவரிடம் கொண்டு செல்வதில் ஆசிரியர் என்பவர் ஒரு கட்டமைப்பாளராக விளங்க வேண்டும் என்றும் கூறினார்.
பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பார்வதி மற்றும் மயில்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பயிற்சி ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வராசு, சீனிவாசன், தமிழ்செல்வி மற்றும் வட்டார வள மேற்பார்வையாளர் அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில், 383 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பட்டனர்.






