என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகரசம்பட்டி அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த இளைஞர்கள் சக்திவேல், பழனி இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
நாகரசம்பட்டி அருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த 2 பேர் கைது
- கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக நாகசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இருவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள அகரம் ராமர்கொட்டாய் பகுதியில் உள்ள சாமுண்டீஸ்வரி வன பகுதியில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக நாகசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவசந்தர் மற்றும் போலீசார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டர். அப்பொழுது கோவிந்தசாமி என்பது வாழைத்தோட்டத்தில் சுமார் 5 -க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் 10 அடி உயரத்தில் வளர்க்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை நடத்தியதில் ராமர் கொட்டாயை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் பழனி வயது (25), அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகன் சக்திவேல் வயது (21) ஆகிய இருவரை நாகரசம்பட்டி போலீசார் கைது செய்து, கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி பறிமுதல் செய்தனர்.
இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.






