என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மாநகராட்சி சார்பில்  உலகவீடற்றோர்தின விழிப்புணர்வு கூட்டம்
    X

    மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்கள் மேற்கொள்ளும் பணிகளை மேயர் சத்யா பார்வையிட்டபோது எடுத்த படம்.

    ஓசூர் மாநகராட்சி சார்பில் உலகவீடற்றோர்தின விழிப்புணர்வு கூட்டம்

    • உலக மனநல தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
    • ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா கலந்து கொண்டு பேசினார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி சார்பில், உலக வீடற்றோர் தினம் மற்றும் உலக மனநல தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

    இதையொட்டி ஓசூர் அண்ணாமலைநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா கலந்து கொண்டு பேசினார்.

    அந்த இல்லத்தை பார்வையிட்டு தங்குமிட வசதி, அங்கு பெண்கள் மேற்கொள்ளும் பணிகள் ஆகிவற்றையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு மருத்துவ முகாமினையும், சத்யா தொடங்கி வைத்தார்.

    இதில்துணை மேயர் ஆனந்தய்யா, மாநகரா ட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன், மாநகர நல அலுவலர் அஜிதா, மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மாநகராட்சி பொறியாளர்கள்,மாமன்ற உறுப்பினர் யசஷ்வினி மோகன், சமூக சேவகி ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×