என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே பா.ஜனதா பிரமுகரின் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசியது யார்? போலீசார் தீவிர விசாரணை
- பெட்ரோல் நிரப்பப்பட்டு திரியுடன் 4 பெட்ரோல் குண்டுகள் கிடந்தது.
- கண்காணிப்பு காமிராக்களை காவேரிப்பட்டணம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெகதாப்பை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 42). பா.ஜனதா கட்சி பிரமுகர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இவருக்கு காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பு நேற்று மாலை பெட்ரோல் நிரப்பப்பட்டு திரியுடன் 4 பெட்ரோல் குண்டுகள் கிடந்தது. இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு இவரது வீட்டின் வாசல் அருகில் 4 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களும், ஒரு பெட்ரோல் நிரப்பப்படாத மதுபாட்டிலும் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரது வீட்டின் அருகில் பெட்ரோல் குண்டுகளை போட்டு சென்றது யார்? என தெரியவில்லை.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை காவேரிப்பட்டணம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகள் வீசினர்.
இதனால் பெரும்பர பரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பா.ஜ.க. பிரமுகர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.






