புஷ்பகிரி குழந்தை தெரசால் ஆலயத்தின் 8-ம் ஆண்டு தேர்த் திருவிழா

தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசால் தேர் பவனி நடைபெற்றது.
புஷ்பகிரி குழந்தை தெரசால் ஆலயத்தின்  8-ம் ஆண்டு தேர்த் திருவிழா
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றி யத்திற்குட்பட்ட புஷ்பகிரி கிராமத்தில் உள்ள குழந்தை தெரசால் ஆலயத்தின், 8-ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அன்று முதல் தினமும் மாலை 6- மணிக்கு ஜெப மாலையும், வேண்டுதல் தேர் பவனியுடன் திருப்பலி நிகழ்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் காலை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மாலை 6- மணியளவில் வான வேடிக்கைகளுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசால் தேர் பவனி நடைபெற்றது. இதனை, சுண்டம்பட்டி பங்குத்தந்தை ஜார்ஜ், மந்தரித்து துவக்கி வைத்தார். இந்த தேர்பவனியில் புஷ்பகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுபேதார் மேடு மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com