என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில்  தேசிய அஞ்சல் வார விழா   -13-ந் தேதி வரை நடக்கிறது
    X

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வார விழா -13-ந் தேதி வரை நடக்கிறது

    • சேமிப்பு கணக்கு மற்றம் இன்சூரன்ஸ் பாலிசிகளை துவக்கி கொள்ளலாம்.
    • “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்” கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அஞ்சல் துறையின் சார்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வார விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, இன்று உலக அஞ்சல் தினம், 10-ந் தேதி நிதி வலுவூட்டல் நாள், 11-ந் தேதி தபால்தலை தினம், 12-ந் தேதி தபால் தினம், 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினம் என விழா கொண்டாடப்படுகிறது.அதன்படி, 10-ந் தேதி நடைபெறும் நிதி வலுவூட்டல் நாளில் அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் அந்த முகாம்களிலும் அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் சேமிப்பு கணக்கு மற்றம் இன்சூரன்ஸ் பாலிசிகளை துவக்கி கொள்ளலாம்.

    11-ந்தேதி தபால் தலை தினத்தன்று பள்ளி மாணவ, மாணவிகள் தபால் தலை கணக்குகளை தொடங்கலாம். மேலும், தங்களது புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு சென்று ரூ.300 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினத்தன்று அஞ்சலகங்களில் ஆதார் முகாம் நடைபெறும். மக்கள் இந்த ஆதார் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் "தபால்காரரும் தாத்தா பாட்டியும்" என்ற பெயரில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் 60 வயதிற்கு மேற்பட்ட தனி நபர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ராணு வீரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்கள் அல்லது தபால் காரர்களை அணுகி "மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்" கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×