என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு"

    • சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது.
    • பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது- சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது.

    இந்த கன மழையால் கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக கிருஷ்ணகி 5 ரோடு ரவுண்டானா, பெங்களூரு சாலையில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது-. இந்த மழையால் கிருஷ்ணகிரி நகரிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் இரவு குளிர்ந்த காற்று வீசியது.

    நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாரூர் - 7.40, பெனுகொண்டாபுரம், நெடுங்கல்- 5.20, கிருஷ்ணகிரி - 1.80, ஊத்தங்கரை- 1.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே திடீரென அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.

    தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகர், அன்னசாகரம், நெசவாளர் காலனி பகுதி மற்றும் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, பென்னாகரம், செட்டிகரை, சோளைக்கொட்டாய், ஒடசல்பட்டி கூட்ரோடு, கடத்தூர், மொரப்பூர், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் பேருந்துகளுக்கு செல்லும் மக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் மழை இல்லாமல் வெப்பம் வீசி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று மாலை கனமழை பெய்தது.

    ×