என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் காணாமல் போன விவகாரத்தில் மேஸ்திரியை தாக்கிய நண்பர்கள்
- சமீபத்தில் தினேஷின் மோட்டார்சைக்கிள் காணாமல் போனது.
- தினேஷ் உள்ளிட்ட அனைவரும் இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கியதில் சீனிவாசன் காயமடைந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்.இவரது மகன் சீனிவாசன் (வயது 17).கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் கிட்டம்பட்டியை சேர்ந்த தினேஷ்.
சமீபத்தில் தினேஷின் மோட்டார்சைக்கிள் காணாமல் போனது. இதை சீனிவாசன்தான் திருடி யுள்ளார் என்று தினேஷ் சந்தேகப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படையப்பா, மஞ்சு, அகில், ராம்ராஜ் ஆகியோர் சந்தித்து மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து விசாரித்துள்ளனர்.
தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று சீனிவாசன் மறுத்துள்ளார்.அப்போது தினேஷ் உள்ளிட்ட அனைவரும் இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கியதில் சீனிவாசன் காயமடைந்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சீனி வாசன் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் தினேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராம்ராஜை கைது செய்தனர்.






