என் மலர்
நீங்கள் தேடியது "மாணவியை கடத்திய வாலிபர்"
- 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- மாணவியை வாலிபர் பள்ளியில் விடாமல் ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.
கோவை,
கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவிக்கு குடும்ப நண்பரான அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்தார். அவர் மாணவியிடம் பள்ளியில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். பின்னர் மாணவியை வாலிபர் பள்ளியில் விடாமல் ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.
அங்கு சென்ற வாலிபர், மாணவியின் உறவினரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு நாங்கள் 2 பேரும் காதலிக்கிறோம். திருமணம் செய்ய போகிறோம். எங்களை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் விடுவதாக கூறி பிளஸ்-2 மாணவியை மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- கடந்த 9-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார்.
- அதே பகுதியை சேர்ந்த திருமலை (வயது 20) என்ற வாலிபர்தான் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக மாணவியின் தாய் புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகேயுள்ள எர்ரஅள்ளி பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் தருமபுரியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து
இவர் கடந்த 9-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார். அவரை பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமலை (வயது 20) என்ற வாலிபர்தான் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக மாணவியின் தாய் புகார் செய்துள்ளார். இந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






