என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A teenager kidnapped a plus-2 student"

    • 17 வயது மாணவி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் வசித்து வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரை அவரது பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அப்போது அவரை அவரது காதலன் திருமண ஆசை காட்டி தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு கடத்தி சென்றார். மாணவியின் பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது தங்களது மகளை வாலிபர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் காட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள். 

    • 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • மாணவியை வாலிபர் பள்ளியில் விடாமல் ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவிக்கு குடும்ப நண்பரான அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்தார். அவர் மாணவியிடம் பள்ளியில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். பின்னர் மாணவியை வாலிபர் பள்ளியில் விடாமல் ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.

    அங்கு சென்ற வாலிபர், மாணவியின் உறவினரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு நாங்கள் 2 பேரும் காதலிக்கிறோம். திருமணம் செய்ய போகிறோம். எங்களை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் விடுவதாக கூறி பிளஸ்-2 மாணவியை மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×