என் மலர்
கிருஷ்ணகிரி
- நலம் விசாரிக்க செல்ல வேண்டும் என்று கூறி மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பாரு வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 22 ).
இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் 2-வது பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்ற வள்ளியம்மாள் அங்கிருந்து கடந்த மாதம் 29-ந்தேதி அன்றுதான் வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் மறுநாளே தனது அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை நலம் விசாரிக்க செல்ல வேண்டும் என்று கூறி மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலை அங்கு சென்று வீட்டுக்கு வருமாறு வள்ளியம்மாளை அழைத்துள்ளார். வரமறுத்து வள்ளியம்மாள் பிடிவாதம் பிடித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த வள்ளியம்மாள் விஷம் குடித்து விட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
- மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் படைவீரர்களிடமிருந்து 16 மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி உத்தரவிட்டார்.
மேலும், முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர், முன்னாள் படைவீரர்கள் தொகுப்பு
- ஆலத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற அணியில் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மத்தூர்,
ஊத்தங்கரை, அதியமான் பப்ளிக் பள்ளியில் உள்ள சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் கடந்த வாரம் 27-ம் தேதி முதல் 29 -ம் தேதி வரை சென்னை ஆலத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற அணியில் கலந்து கொண்டனர்.
அவ்வணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் உடல், உள, ஆன்மீக மேம்பாட்டிற்காகவும் கட்டமைக்கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும் சமூக செயல்பாடுகளில் உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அங்கு பல செயல்திறன் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன. அப்பயிற்சிகளுக்கு கல்வி அமைச்சரும், சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமை வகித்தார். அப்பயிற்சியின் முடிவில் சில போட்டிகள் நடைபெற்றன.
பேண்ட் பார்டியில் சாரண மாணவர்கள் முதலிடமும் சாரணிய மாணவிகள் இரண்டாம் இடமும் பெற்று வெற்றி வாகை சூடினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மிகச் சிறப்பாக செயல்பட்ட சாரண, சாரணிய இயக்க மாணவர்களுக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி இராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.
- மரியசெல்வம் (45) என்பவருக்கும், சவுரியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
- 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அஞ்செட்டி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பிலிகுண்டுலு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரியம்மாள் (வயது 45). கூலித்தொழிலாளி.
இவருடைய கணவர் குழந்தைசாமி. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அதே ஊரை சேர்ந்த மரியசெல்வம் (45) என்பவருக்கும், சவுரியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதனிடையே மரியசெல்வம் மதுபோதையில் சவுரியம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போலீசுக்கு தெரிவிக்காமல் 2 பேரின் உடல்களையும் கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லத்தியாலும், காலாலும் தாக்கியதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.
- போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோபச்சந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவின் போது ஏற்பட்ட வன்முறையில், நான் ஒருவரை லத்தியாலும், காலாலும் தாக்கியதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.
எருது விடும் விழாவின் போது ஏற்பட்ட வன்முறையில், அங்கிருந்த பெண்கள் மற்றும் பெண் போலீசாரிடம் சிலர் அத்துமீறி நடக்க முயன்றனர். மேலும் அவர்கள் மீது கற்களை வீசியும், ஆபாசமான வார்த்தைகளாலும் பேசினர். இதனால் அவர்களை பிடித்து அமர வைத்தோம். அப்போது நடந்த நிகழ்வை தான், போலீஸ் சூப்பிரண்டு லத்தியால் அடிக்கிறார். பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் சிலர் தவறாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மையிலேயே அங்கு என்ன நடந்தது என்று அங்கிருந்த போலீசார், உள்ளூர் மக்கள் அறிவார்கள். ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் அரசின் கவனக்குறைவோ, மாவட்ட நிர்வாக குளறுபடியோ இல்லை. விழா நடத்துபவர்கள், உரிய சான்றிதழை அளிக்க தாமதமானதால் இளைஞர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர். உள்ளூர் பொதுமக்கள் யாரும் பிரச்சினையில் ஈடுபடவில்லை.
பொதுவாக எருதுவிடும் விழாவில் உள்ளூர் மாடுகளை கொண்டே நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் விதிகளுக்கு மாறாக அண்டை மாநில வாலிபர்கள், தங்கள் மாடுகளுடன் வந்தனர். அவர்கள் எருது விடும் விழா நடத்த தாமதமானதாக கூறி சாலையில் மறியல் செய்தும், தாக்கியும் உள்ளனர்.
உள்ளூரை சேர்ந்த பெண்களிடமும், பெண் போலீசாரிடமும் அத்துமீறி நடக்க முயன்றது பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான். வன்முறைக்கு காரணமானவர்கள் யார் என்று புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். ஒருவரும் தப்ப முடியாது. அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
சாலை மறியலின் போது முதலில் லாரியை கொண்டு வந்து சாலையின் குறுக்கே நிறுத்தியது யார்? என்றும், சாலையில் கற்களை போட்டது யார்? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். அரசு உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் பொதுமக்கள் யாரும் காயம் அடையவில்லை.
இனி வரும் காலங்களில் எருது விடும் விழா நடத்துபவர்கள் விழாவிற்கு முந்தைய நாளே தகுதியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் எருது விடும் விழாவிற்கு வெளிமாநிலத்தில் இருந்து இனி மாடுகளுடன் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வெளிமாவட்ட மக்கள் தங்களின் மாடுகளுடன் இங்கு வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
- அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மகா அழக கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பியற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், இப்பயிற்சியை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள் ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.
இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெற கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் எம்.பி., வெற்றிச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதாநவாப், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கும் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா நேற்று தொடங்கியது.
- பால் குடம் எடுத்தவாறு மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.
ஓசூர்,
ஓசூர் சமத்துவபுரம் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் 6- ஆம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா நேற்று தொடங்கியது.
முதல் நாள் நிகழ்ச்சி, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஓசூர் தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்திலிருந்து, கோவில் தர்மகர்த்தா பாண்டியன் தலைமையில் ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு பால் குடம் எடுத்தவாறு மேள தாளத்துடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சென்றடைந்தனர். மேலும், பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் குலுக்கல் மூலம் மல்லிகாவுக்கு ரூ.12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
- வங்கி கணக்கு மற்றும் போன் பே மூலம் மல்லிகா ரூ.5.22 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள மேசகம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மல்லிகா (வயது 28).
இவர் ஆன்லைன் மூலம் அடிக்கடி பொருட்கள் வாங்குவது வழக்கம். இந்நிலையில் மல்லிகாவுக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில் அவர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் குலுக்கல் மூலம் மல்லிகாவுக்கு ரூ.12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அந்த பரிசை வாங்க ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளுக்காக ரூ.5.22 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கு மற்றும் போன் பே மூலம் மல்லிகா ரூ.5.22 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அவருக்கு வந்த கடிதத்தில் கூறப்பட்டபடி எந்த பரிசும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாந்ததை அறிந்த மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர்.
- விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 14-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஏற்கனவே 4 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், தற்போது குட்டிகளுடன் மேலும் யானைகள் வந்துள்ளன. இதனால் அப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதிகாலை நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடும்.
இந்நிலையில் இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து, நாயக்கனபள்ளி கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைகள் சென்றன.
அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சினிகிரிப்பள்ளி, ராமபுரம், அம்பலட்டி, ஆழியாளம் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாய பயிர்கள் சேதப்படுத்தியுள்ளன. இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஊழியர்கள், பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு அருகில் உள்ள சானமாவு வனப்பகுதிக்கு யானைகளை விரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சானமாவு வனப்பகுதியில் சுமார் 60 யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளன. அதனால் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனால் விவசாயிகள் யாரும் இரவு நேரங்களில் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம். வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆழியாளம் உள்பட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- ரூ. 12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
- ஏமாந்ததை அறிந்த மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள மேசகம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மல்லிகா (வயது 28).
இவர் ஆன்லைன் மூலம் அடிக்கடி பொருட்கள் வாங்குவது வழக்கம். இந்நிலையில் மல்லிகாவுக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில் அவர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் குலுக்கல் மூலம் மல்லிகாவுக்கு ரூ. 12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அந்த பரிசை வாங்க ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளுக்காக ரூ.5.22 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கு மற்றும் போன் பே மூலம் மல்லிகா ரூ.5.22 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அவருக்கு வந்த கடிதத்தில் கூறப்பட்டபடி எந்த பரிசும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாந்ததை அறிந்த மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் கோபித்துக்கொண்டு சுஷ்மா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
- மறுத்துவிடவே உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள மூக்கண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுஷ்மா (44).
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கோபித்துக்கொண்டு சுஷ்மா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்நிலையில் கடந்த 1-ந்தேதி அன்று சுஷ்மாவின் தாய் வீட்டுக்கு வந்த பிரகாஷ் மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு சுஷ்மாவை அழைத்தார்.
ஆனால் அவர் மறுத்துவிடவே உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சுஷ்மா பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சுஷ்மாவின் தாய் வஜ்ஜிரம்மா தந்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






