என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு
    X

    மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்ப தகராறில் கோபித்துக்கொண்டு சுஷ்மா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
    • மறுத்துவிடவே உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள மூக்கண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுஷ்மா (44).

    கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கோபித்துக்கொண்டு சுஷ்மா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி அன்று சுஷ்மாவின் தாய் வீட்டுக்கு வந்த பிரகாஷ் மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு சுஷ்மாவை அழைத்தார்.

    ஆனால் அவர் மறுத்துவிடவே உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த சுஷ்மா பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து சுஷ்மாவின் தாய் வஜ்ஜிரம்மா தந்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×