என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மாசாணியம்மன் கோவிலில்குண்டம் திருவிழா

    • மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா நேற்று தொடங்கியது.
    • பால் குடம் எடுத்தவாறு மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் சமத்துவபுரம் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் 6- ஆம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் திருவிழா நேற்று தொடங்கியது.

    முதல் நாள் நிகழ்ச்சி, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஓசூர் தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்திலிருந்து, கோவில் தர்மகர்த்தா பாண்டியன் தலைமையில் ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு பால் குடம் எடுத்தவாறு மேள தாளத்துடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை சென்றடைந்தனர். மேலும், பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    Next Story
    ×