என் மலர்
கிருஷ்ணகிரி
- முன்பு பட்டியில் இருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தது.
- இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எக்கூர் கிராமத்தில் உள்ள திருமணி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பட்டியில் இருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தது.
இந்த நிலையில் அதே பகுதியில் நேற்று பக்தவாசலம் என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கட்டிவைத்தியிருந்த 1 மாட்டை மர்ம விலங்கு கடித்து இறந்துள்ளது.
இந்த நிலையில் பழனி வட்டத்தில் உள்ள பூங்காவனம் என்பவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று பிற்பகல் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்த 1 ஆடு மர்ம விலங்கு கடித்து பலியானது. இச் சம்பவங்களால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பீதி நிலவுகிறது.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிப்.6- இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் மீது ஜே.சி.பி. எந்திரம் மூலம் ரோட்டை சீரமைக்க ரோட்டை தோண்டி எடுத்தனர்.
- நெடுஞ்சாலைத் துறையினர் கோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் தென்பெ ண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் வழியாகத்தான் காவேரிப்பட்டி னத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு மற்றும் வெளியூருக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.
இதில் உள்ள ரோடு மிகவும் பழுதடைந்ததால் நெடுஞ்சாலை துறையால் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் மீது ஜே.சி.பி. எந்திரம் மூலம் ரோட்டை சீரமைக்க ரோட்டை தோண்டி எடுத்தனர். பின்பு நெடுஞ்சாலைத் துறையினர் கோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
காவேரிப்பட்டினத்தில் வருகிற 18, 19 மாசி மாத அமாவாசை முன்னிட்டு அங்காளம்மன் பண்டிகை நடைபெறுகிறது. அப்பொழுது தென் பண்ணையாற்றில் பாலத்தின் மீது அம்மனுக்கு நேர்த்திக்கடனாக அலகு குத்துதல், சங்கிலி இழுத்தல், எலுமிச்சம்பழம் குத்துதல், காளி வேடம், மற்றும் அம்மன் தேர் வலையாகத்தான் வரும். அப்பொழுது பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள். எனவே உடனடியாக பாலத்தின் மீது உள்ள ரோட்டை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகாலையில் சுப்ரபாத சேவை, அபிஷேகம், சாமிக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டது.
- விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், சுண்டல், பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே,பேரிகை சாலையில் குடிசெட்லு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா, நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகள் கடந்த 1-ந்தேதி, பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்கார சேவை, யாகசாலை பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.முன்னதாக, அதிகாலையில் சுப்ரபாத சேவை, அபிஷேகம், சாமிக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமி எழுந்தருளினார். அப்போது பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்று பகுதி முழுக்கம் எழுப்பியவாறு தேரை இழுத்து சென்றனர்.
விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், சுண்டல், பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், ஓசூர், பாகலூர் பேரிகை மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்தும், அத்திப்பள்ளி, சந்தாபுரா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினார்கள்.
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- குழந்தை அக்சிதாவுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரகலா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- மகேஸ்வரா கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள சப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரா. இவரது மனைவி சந்திரகலா (வயது 26), இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது 6 வயது பெண் குழந்தை அக்சிதாவுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரகலா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மகேஸ்வரா கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கிருஷ்ணகிரி அருகேயுள்ள கே.கொத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடத்தி சென்று விட்டதாக சிறுமியின் தாய் காந்தம்மா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல அன்செட்டியா அருகேயுள்ள நாட்ராயம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (40) என்பவர் கடந்த மாதம் 17-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பச்சியம்மா தந்த புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிழைப்பு நடத்துவதற்காக சொந்த மாநிலத்தை விட்டுவிட்டு இங்கு வந்து தங்கியுள்ளனர்.
- பிஜிதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வாணியர் தெருவில் வசித்து வந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜிதாஸ் (வயது 31). இவரது மனைவி சுஷ்மிதாதாஸ். இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. பிழைப்பு நடத்துவதற்காக சொந்த மாநிலத்தை விட்டுவிட்டு இங்கு வந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சுஷ்மிதாதாஸ் வேறு ஒருவருடன் தவறான உறவில் இருந்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த பிஜிதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவரது நண்பர் ரூபக்தே கொடுத்த புகாரின்பேரில் குளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆசிரியர் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில் ஓசூரில் முப்பெரும் விழா நடைபெற்றது.
- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினரை சந்தித்து பேசி கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு வருகிறார்.
ஓசூர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில் ஓசூரில் முப்பெரும் விழா நடைபெற்றது.
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதியில் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் சீனி. சாரதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாபதி தசரதராமிரெட்டி, ஓசூர் ஒன்றிய தலைவர் நாகபிரசாத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாநில தலைவர் ரவி, மாநில பொருளாளர் முருக.செல்வராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
பின்னர், சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெற்று வந்த பல்வேறு சலுகைகள், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், இன்று புதிய ஆட்சி உருவாகியுள்ளது. கடந்த ஆட்சியில், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர்.
தற்போதைய அரசு. ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஆட்சியில் போடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை, ரத்து செய்துள்ளது. கடந்த ஆட்சியில் நியாயான கோரிக்கைகளுக்காக போராடியும், ஒரு முறை கூட எங்களை அழைத்து பேசவில்லை. இன்றைய முதல்-அமைச்சர் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினரை சந்தித்து பேசி கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு வருகிறார்.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர, மற்ற பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி தரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு,ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலன் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
- குருபரப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையினையொட்டி தொடர்ந்து3மாதங்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த விழாவில் எருதுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு நேரம் கடந்து எருதுகள் ஓடுகிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிடப்பட்டு, குறைந்த நேரத்தில் ஓடும் எருதுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.
இதற்காக எருதுகளை அதன் உரிமையாளர்கள் பல பயிற்சிகள் அளித்து, அழைத்து வருகின்றனர்.
அந்த எருதுகளை வேறு வேலைக்கு, அதாவது உழவு, மாட்டு வண்டி போன்ற எதற்கு பயன்படுத்தாமல், வருடத்தில் 9மாதம் அதற்கான உணவை அளித்து வளர்த்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இந்த எருது விடும் திருவிழாவில் பரிசு பெறுவதை பெருமையாக கருதி, அதற்காகவே பல லட்சங்கள் செலவு செய்து எருதுவிடும் திருவிழாவில் பங்கேற்க தங்கள் எருதுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தமிழக அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு கிருஷ்ணகிரி அடுத்த பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நடந்தது.
இதில் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எருதுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து போட்டியில் பங்கேற்க வைத்தனர்.
அவ்வாறு அழைத்து வரப்பட்ட எருதுகளை மந்தையில் ஓட விட்டு, ஸ்டாப் வாட்ச் மூலம் குறைந்த நேரத்தில் ஓடிய எருதுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
அதன்படி, முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.35 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.25 ஆயிரம், 5ம் பரிசாக ரூ.17 ஆயிரம் என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொது மக்கள், இளை ஞர்கள் செய்திருந்தனர்.
மேலும் விழாவின் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுத்திட குருபரப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழா ஒன்றாகும்.
- முருகன் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன பக்தர்கள் வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி,
முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழா ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது.
கிருஷ்ணகிரி -காட்டிநாயனப்பள்ளி ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிற்பபாக நடைபெறுவது வழக்கம். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அந்த வகையில் தைப்பூச திருவிழாவிற்கும் பக்தர்கள் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தேரில் வள்ளி, தெய்வானை சமேதமாய் காட்சி அளித்த முருக பெருமானை பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் பயபக்தியிடன் முருக பெருமானை வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இதே போல மாவட்டம் முழுவதும் முருகன் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன பக்தர்கள் வழிபட்டனர்.
- இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்ப டையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.
- ஏ.ஏ.எஸ்.எஸ்.சி-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்ப டையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி ஏவிஷேன் அக்டாமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொட ர்புடைய நிறுவனங்களில் பயிற்சியினை அளிக்கப்ப டவுள்ளது.
இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும், கல்வித் தகுதியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியி சேர விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதமும், விடுதில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும். இப்பயிற்சினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஏ.ஏ.எஸ்.எஸ்.சி-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க ப்படும்.
இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com ல் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
- வெங்கடேசனு க்கும் அவர் மனைவி பழனிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு ள்ளது.
- முத்துசாமியை காவேரி ப்பட்டணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மணிமாடிகொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன், (வயது 51)விவசாயி.
இவரது மனைவி பழனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(40) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் உறவு இருந்துள்ளது.
இதனால் வெங்கடேசனு க்கும் அவர் மனைவி பழனிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு ள்ளது.
இந்த நிலையில் கடந்த, இரு மாதங்களுக்கு முன் வெங்கடேசனிடம் கோபித்து கொண்ட பழனி, போத்தாபுரத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றார்.
மனைவியை சமாதா னப்படுத்தி வீட்டிற்கு அழைக்க சென்ற வெங்கடே சனுக்கு, பழனியின் வீட்டில் அவரது கள்ளக்காதலன் முத்துசாமி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கேட்டபோது, வெங்கடேசனை அவரது மனைவி பழனி, கள்ளக்காதலன் முத்துசாமி ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
அருகிலிருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முத்துசாமி மீதும், நடந்த விவரங்கள் குறித்தும் வெங்கடேசன் காவேரி ப்பட்டணம் போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
முத்துசாமியை போலீசார் அழைத்து கண்டித்துள்ளனர். ஆனாலும் பழனியுடன் இருந்த கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை.
இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வெங்கடேசன் கடந்த, 1-ந் தேதி விஷம் குடித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்த நிலையில் நேற்றுமுன்தினம் இறந்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக வைக்க ப்பட்ட வெங்கடேசனின் சடலத்தை வாங்க மறுத்தும், முத்துசாமியை கைது செய்ய வலியுறுத்திம் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனை வெங்கடேசனின் உறவி னர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து வெங்கடே சனின் தந்தை கரியகவுண்டர் அளித்த புகார்படி, வேலூரில் பதுங்கியிருந்த முத்துசாமியை காவேரி ப்பட்டணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அனுமதி மறுக்கப்பட்டதால் எருதுவிடும் விழாவிற்கு காத்திருந்த காளைகளை அவிழ்த்து விட்டனர்.
- எருதுவிடும் விழா நடைபெறாமல் போனால் சாமிகுத்தம் ஏற்பட்டுவிடும் என ஊர் பெரியவர்கள் கூறினர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் பொங்கல் முடிந்த பிறகு ஆண்டு தோறும் எருதுவிடும் விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் எருதுவிடும் விழாவிற்கு கிராம மக்கள் பாரூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டனர்.
ஆனால் எருதுவிடும் விழாவிற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. இதனால் காளைகளுடன் எதிர்பார்ப்பில் காத்திருந்த ஊர் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
அனுமதி மறுக்கப்பட்டதால் எருதுவிடும் விழாவிற்கு காத்திருந்த காளைகளை அவிழ்த்து விட்டனர்.
எருதுவிடும் விழா நடைபெறாமல் போனால் சாமிகுத்தம் ஏற்பட்டுவிடும் என ஊர் பெரியவர்கள் கூறினர். இதனால் கீழ்குப்பம் ஊர் கவுண்டர் சசிக்கு எருதுகளுக்கு போல் கயிறு கட்டி மாரியம்மன் கோவிலை மூன்று முறை வலம் வந்து அவிழ்த்து விட்டதன் மூலம் சாமி குத்தம் நீங்கியதாக கிராம மக்கள் நம்பினர்.
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் எருதுவிடும் விழா நடைபெறும் கிராமங்களில் விழா தடைப்பட்டால் ஊர் கவுண்டரை வைத்து சாமிகுத்தத்தை தவிர்ப்பதற்காக இது போன்று செயல்படுவது வழக்கம்.
- வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- இன்பசேகரன் என்ற இளைஞர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 21). கடந்த மாதம் 19-ந்தேதி அன்று வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்துள்ள ஸ்ரீநிதியின் தாய் வெங்கட்டம்மாள் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த இன்பசேகரன் என்ற இளைஞர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






