என் மலர்
உள்ளூர் செய்திகள்

தைப்பூச திருவிழா: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
- முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழா ஒன்றாகும்.
- முருகன் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன பக்தர்கள் வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி,
முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழா ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது.
கிருஷ்ணகிரி -காட்டிநாயனப்பள்ளி ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிற்பபாக நடைபெறுவது வழக்கம். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அந்த வகையில் தைப்பூச திருவிழாவிற்கும் பக்தர்கள் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தேரில் வள்ளி, தெய்வானை சமேதமாய் காட்சி அளித்த முருக பெருமானை பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் பயபக்தியிடன் முருக பெருமானை வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இதே போல மாவட்டம் முழுவதும் முருகன் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன பக்தர்கள் வழிபட்டனர்.






