என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • திருச்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் பெண்கள் ஓட்டுனர் வேலை இருப்பதாக கூறினார்கள்.
    • மனித அத்துமீறல்கள் இருப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி கோட்டை பகுதியை சேர்ந்த பஷீர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் வசித்து வருகிறேன். என் மனைவி நஜ்மா, 29 என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஹக்கீம் மற்றும் திருச்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் பெண்கள் ஓட்டுனர் வேலை இருப்பதாக கூறினார்கள்.

    என் மனைவி நஜ்மாவிடம் அதிக சம்பளம் பெற்று தருவதாக கூறினார்கள். இதையடுத்து நஜ்மா கடந்த, 2022-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி துபாய்க்கு சென்றார். என் மனைவியை நான் மொபைலில் தொடர்பு கொண்ட போது, கடந்த ஒரு மாத காலமாக, அங்கு அவரை கஷ்டப்படுத்து வதாகவும், மனித அத்துமீறல்கள் இருப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் என் மனைவியை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலம் சம்மந்தமாக மகன்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • இது தொடர்பாக 3 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள சுண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு ரமேஷ், உதயகுமார், சுபாஸ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜ்க்கு சுமார் 7 அரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் சம்மந்தமாக மகன்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக 3 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷ், உதயகுமார், சுபாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • பூட்டை உடைத்து 130 பட்டு புடவைகள், 3 பவுன் தங்கம், 3 கிலோ வெள்ளி ஆகியவை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த ேகாவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோட்டூர் பகுதியில் சின்னமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து 130 பட்டு புடவைகள், 3 பவுன் தங்கம், 3 கிலோ வெள்ளி ஆகியவை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றனர்.

    இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த ேகாவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் கதவு பூட்டு உடைபட்டிருப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ரத்னா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • யாரோ மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை திறந்து உள்ளே இருந்த ரூ.1,95,000- மதிப்புள்ள 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் 3வது கிராசில் வசித்து வருபவர் தெய்வம் (வயது38). இவர் கர்நாடக மாநிலம் பொம்மசந்திராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி குடும்பத்துடன், ஒரு விழாவில் கலந்து கொள்ள தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சென்றார். மறுநாள், அவரது வீட்டின் கதவு பூட்டு உடைபட்டிருப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ரத்னா என்பவர், இது குறித்து தெய்வத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக விரைந்து வந்த அவர், வீட்டின் பூட்டை வைத்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை திறந்து உள்ளே இருந்த ரூ.1,95,000- மதிப்புள்ள 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்ததன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஓசூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சினேகா நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
    • மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சினேகா நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.

    2017 பேட்ச் அதிகாரியான இவர், இதற்கு முன்பு கிரேட்டர் சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் இணை ஆணையாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நிருபர்களிடம் புதிய ஆணையாளர் சினேகா கூறுகையில் " ஓசூர் மாநகர மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை புரிந்துகொண்டு, அரசு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.

    • யானை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இதனிடையே உத்தனப்பள்ளி அருகே சானமாவு காட்டில் 58 யானைகள் முகாமிட்டுள்ளன. டி.கொத்தப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, சானமாவு, போடூர்பள்ளம், பேரண்டப்பள்ளி, பென்னிக்கல் ஆகிய பகுதிகளில் 6 குழுக்களாக இந்த யானைகள் பிரிந்து சுற்றித்திரிகின்றன.

    இந்த நிலையில் சானமாவு காட்டில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தது.

    இதைபார்த்து கிராமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    பின்னர் அந்த யானை சானமாவு காட்டிற்குள் சென்றது. இதையடுத்து இன்றுகாலை பென்னிக்கல், டி.கொத்தப்பள்ளி பகுதிகளில் 2 காட்டு யானைகள் வந்துள்ளது.

    அந்த யானைகள் விவசாய விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து அந்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த யானை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.
    • சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) விலிருந்து அறிவியல் விஞ்ஞானிகளான கிருஷ்ணம் பிரசாத், ரமணா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் முன்னிலையில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் விஞ்ஞானிகளுடன் தமிழ் துறைக்குச் சென்று அனைவரும் குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

    தமிழ்த் துறையில் ஐவகை நிலங்கள், கைவினைப் பொருட்கள், மூலிகைகள், கீரை வகைகள், தஞ்சை பெரியகோவில், பேசும் ஓவியங்கள் போன்றவற்றை வரிசையாக பார்த்து மாணவர்களிடையே சில வினாக்களை எழுப்பி அவர்களின் திறனை கேட்டார்கள். அடுத்ததாக சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.

    பின்பு கணினி, ஆங்கிலம், கலைத்துறை மற்றும் இந்தி, சமூக அறிவியல் என அனைத்து துறைகளையும் பார்வையிட்டனர். கண்காட்சியை தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.

    • போலீசாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் நாளுக்கு நாள் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
    • மணிக்கூண்டில் அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்தி வருவது தேன்கனிக்கோட்டை பகுதி சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய பகுதியான மணிக்கூண்டு சமீபத்தில் சமூக ஆர்வலகள். மற்றும் பொதுமக்கள் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய நினைவு சின்னமாக உள்ளது. இந்த மணிக்கூண்டில் சுவற்றில் காந்தி, வேலுநாச்சியாளர், கட்டபொம்மன், சுபாஸ் சந்திரபோஸ் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக மணிக்கூண்டில் இரவில் அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதை போலீசாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் நாளுக்கு நாள் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    நாட்டிற்காக போராடிய தியாகிகள் சிலைகள் உள்ள மணிக்கூண்டில் அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்தி வருவது தேன்கனிக்கோட்டை பகுதி சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர் கதையாக உள்ளதால் மணிக்கூண்டின் பெருமை கெட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு இணையாக பார்க்க வேண்டிய மணிக்கூண்டை சிலர் கேவலப்படுத்தும் வகையில் அங்கு அமர்ந்து மது அருந்தி நாசப்படுத்தி வருவதாக ஆதங்கம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
    • இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் டிஜிசிஏ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேளாண்மைத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணாவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டியூட் டெக்னாலஜி, சென்டர் பார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சியை அளிக்கப்பட உள்ளது.

    வளர்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சி கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும்.

    இதன் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கலாம். மேலும், விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த பயிற்சியை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களும், கல்வித் தகுதியில் பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மற்றும் பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும் (இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் பத்து நாட்கள் அளிக்கப்படும்) பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61,100- தாட்கோவால் வழங்கப்படும்.

    இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் டிஜிசிஏ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள். மேலும் இந்த உரிமை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும்.

    இந்த பயிற்சியை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கலாம். மற்றும் உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம்.

    விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும், அல்லது தாட்கோவின் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழி வகை செய்யப்படும்.

    இந்த திட்டத்தில் தகுதி உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டும் அதே போல விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் அதே போல விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் கடந்த 30-ந் தேதி 86-ம் ஆண்டு தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான தைப்பூச திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினார்கள்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

    விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    கெலமங்கலம் அருகே அக்கொண்டப்பள்ளி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஐஜகள் நடந்தன. இதில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள முருகருக்கு தைப்பூசத்தையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    ஊத்தங்கரை அருகே கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த கடவரப்பள்ளி காரக்குப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதேபோல் வேப்பனப்பள்ளி அடுத்து தீர்த்தம் கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச தினத்தை முன்னிட்டு காலை முதலே பால முருகன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

    இதேபோல் வேப்பனப்பள்ளி அடுத்த எடரபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் செய்யப்பட்டது.மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமான, சந்தனம், விபூதி, பால், தயிர், பன்னீர், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்பட 25-க்கும் மேற்பட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகளால் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தொடர்ந்து சுற்றி வந்த பூசாரி, ஒருகட்டத்தில் சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தார்.
    • இந்த கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சமத்துவபுரம் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு 6 -ஆம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மயான கொள்ளை பூஜை நடைபெற்றது. இதனையொட்டி, களி மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் பம்பை, உடுக்கை உள்ளிட்ட மேளதாளங்களுடன் குறி சொல்லி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோவில் பூசாரி, சுடுகாட்டு எலும்பை வாயில் கடித்தபடி அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடினார்.

    மேலும், மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலையை மேளதாளங்களுடன் தொடர்ந்து சுற்றி வந்த பூசாரி, ஒருகட்டத்தில் சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தார்.

    பின்னர்,சிலையின் மேலிருந்த எலுமிச்சை பழம், மஞ்சள் கயிறுகள், மண் உள்ளிட்ட பொருள்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. பேய், பிணி, பீடைகள், விலகவும் நோய்களிலிருந்து தங்களை காக்கவும் பொதுமக்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி கொண்டனர்.

    • தங்கி இருந்து ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • தங்கி இருந்து ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கிருஷ்ணகிரி,

    சத்தீஸ்கர் மாநிலம், சுருகுஜா அருகே உதரி பகுதியை சோந்தவர் ரஜன்திருச்சி (வயது24). இவர் பெலகொண்டபள்ளி பகுதியில் தங்கி இருந்து ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் துப்பட்டால் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×