என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடாரமாக மாறிய மணிக்கூண்டு"

    • போலீசாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் நாளுக்கு நாள் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
    • மணிக்கூண்டில் அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்தி வருவது தேன்கனிக்கோட்டை பகுதி சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய பகுதியான மணிக்கூண்டு சமீபத்தில் சமூக ஆர்வலகள். மற்றும் பொதுமக்கள் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய நினைவு சின்னமாக உள்ளது. இந்த மணிக்கூண்டில் சுவற்றில் காந்தி, வேலுநாச்சியாளர், கட்டபொம்மன், சுபாஸ் சந்திரபோஸ் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக மணிக்கூண்டில் இரவில் அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதை போலீசாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் நாளுக்கு நாள் குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    நாட்டிற்காக போராடிய தியாகிகள் சிலைகள் உள்ள மணிக்கூண்டில் அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்தி வருவது தேன்கனிக்கோட்டை பகுதி சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர் கதையாக உள்ளதால் மணிக்கூண்டின் பெருமை கெட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு இணையாக பார்க்க வேண்டிய மணிக்கூண்டை சிலர் கேவலப்படுத்தும் வகையில் அங்கு அமர்ந்து மது அருந்தி நாசப்படுத்தி வருவதாக ஆதங்கம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×