search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அதியமான் பப்ளிக்  பள்ளியில் அறிவியல் கண்காட்சி
    X

    ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    • சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.
    • சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) விலிருந்து அறிவியல் விஞ்ஞானிகளான கிருஷ்ணம் பிரசாத், ரமணா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் முன்னிலையில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் விஞ்ஞானிகளுடன் தமிழ் துறைக்குச் சென்று அனைவரும் குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

    தமிழ்த் துறையில் ஐவகை நிலங்கள், கைவினைப் பொருட்கள், மூலிகைகள், கீரை வகைகள், தஞ்சை பெரியகோவில், பேசும் ஓவியங்கள் போன்றவற்றை வரிசையாக பார்த்து மாணவர்களிடையே சில வினாக்களை எழுப்பி அவர்களின் திறனை கேட்டார்கள். அடுத்ததாக சத்தான தினை வகை உணவுகளையும், பாரம்பரிய பானங்களையும் அருந்தி விட்டு கணித கண்காட்சி அறைக்குச் சென்றனர்.

    பின்பு கணினி, ஆங்கிலம், கலைத்துறை மற்றும் இந்தி, சமூக அறிவியல் என அனைத்து துறைகளையும் பார்வையிட்டனர். கண்காட்சியை தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.

    Next Story
    ×