என் மலர்
கிருஷ்ணகிரி
- விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
- இறகுப்பந்து விளையாட்டில் 175 பேரும், கிரிக்கெட்டில் 22 அணிகளும் என மொத்தம் 1,060 பேர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இதில், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடக்க உள்ளன. கிரிக்கெட் போட்டி மட்டும் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது.
நேற்று காலை கலெக்டர் தீபக் ஜேக்கப் இந்த போட்டிகளை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேற்று நடந்த போட்டியில், ஆக்கி விளையாட்டில் 12 அணிகளும், கால்பந்தில் பெண்கள் ஆறு அணிகளும், கூடைப்பந்தில் 16 அணிகளும், கைப்பந்தில் 14 அணியும், நீச்சல் போட்டியில், 200 பேரும், இறகுப்பந்து விளையாட்டில் 175 பேரும், கிரிக்கெட்டில் 22 அணிகளும் என மொத்தம் 1,060 பேர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு குழுப் போட்டியிலும் ஒரு சிறந்த ஒரு அணியும், தடகள விளையாட்டில் முதல் இடங்களில் வெற்றி பெறுபவர்களும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற உள்ளனர். வருகிற 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடக்க உள்ளன.
- காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
- ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது.
ஓசூர்,
கர்நாடக மாநிலத்தில் ஒகேனக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் தமிழக கிராம பகுதிகள் வழியாக இடம் பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் புகுந்தது.
இந்த காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
மூங்கில் காடுகளை கொண்ட அடர்ந்த கால்நடை பண்ணைக்குள் தஞ்சமடைந்த இந்த காட்டு யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.
இந்த ஏரியில் அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது. ஆனாலும் தொடர்ந்து மறுகரைக்குச் செல்ல நீந்தி வருகிறது. பல மணி நேரமாக காட்டு யானைகள் நீந்தி வருகிறது.
இந்த காட்டு யானைகள் ஏரி நீரில் நீந்தி மறுகரையில் உள்ள கால்நடை பண்ணைக்குள் செல்லும், இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கால்நடை பண்ணைக்குள் செல்லும் காட்டு யானைகளை வனத்துறையினர் இன்று மாலை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
- சூளகிரி அகாடமி குங்பூ மாணவர்கள் 71 பேர் மாஸ்டர் பவித்ராமன் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
- 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
சூளகிரி,
பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ போட்டி மாஸ்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இப் போட்டியின் தலைமை நடுவராக மலேசியாவில் இருந்து வருகை புரிந்த மகா குரு மாஸ்டர்ஆனந்தன் கலந்து கொண்டார்.
மேலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அகாடமி குங்பூ மாணவர்கள் 71 பேர் மாஸ்டர் பவித்ராமன் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
அதில் 27 பேர் முதலிடத்தையும், 33 பேர் இரண்டாம் இடத்தையும், 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள்கோப்பைகள் சான்றிதழ்களும் மாஸ்டர் ஆனந்தன் வழங்கினார். இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரிதும் பாராட்டினர்.
- சுமதி போலி மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே ராமசந்திரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமதி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கல்வி அதிகாரிகள் இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமதி போலி மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதனால் அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிப்பு போலீசில் காவேரிப்பட்டணம் கல்வி அதிகாரி சபிக்சாப் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் 500 ஆசிரியர்களுக்கும், 20 தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
- மாணவர்களை கையாளுதல் பற்றியும், வருகையை தினசரி பதிவது குறித்தும் விளக்கினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் 500 ஆசிரியர்களுக்கும், 20 தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
அதில் பலவனதிம்ம னபள்ளி நடுநிலை பள்ளியில் நடந்த பயிற்சிக்கு அப்பள்ளி தலைமை யாசிரியர் அதிஷ்டம் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் வைத்தி யநாதன் தொடங்கி வைத்து திட்டத்தின் நோக்கம், மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் குறித்து பேசினார்.
கருத்தாளர்களாக ஆசிரியர்கள் சரவணன், இமல்டா சங்கீதா, பரமே ஸ்வரி ஆகியோர் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் கற்பித்தல் பற்றியும், மாணவர்களை கையாளுதல் பற்றியும், வருகையை தினசரி பதிவது குறித்தும் விளக்கினர்.
பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் தலைமையாசிரியர் நன்றி கூறினார்.
- விளையாட்டு மைதானம் அருகே ராஜாஜி நகரில் சென்று கொண்டிருந்தார்.
- சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெத்ததாளப்பள்ளி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானம் அருகே ராஜாஜி நகரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், எர்ரண்டப்பள்ளி, பேட ப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, செம்பரசனப்பள்ளி, போடூர், திருமலைகோட்டா, அட்டகுறுக்கி, கோபசந்திரம், தியாரசனப்பள்ளி, ஏ.செட்டிப்பள்ளி, பங்காநத்தம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை 9-ந் தேதி உயர் மின் திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வராது.
ஓசூர்,
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை 9-ந் தேதி உயர் மின் திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, ஓசூர் காமராஜ் காலனி, எம்.ஜி.ரோடு, அண்ணாநகர், ராம் நகர், நியூ ஹட்கோ, ஸ்ரீ நகர், பாகலூர் ஹட்கோ, ஆசிரியர் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, அப்பாவு நகர், துவாரகா , முனீஸ்வர் நகர், மத்தம், ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், டைட்டான் இன்டஸ்ட்ரிஸ், அசோக் லேலண்ட் - 1, சிப்கார் ஹவுசிங் காலனி ( பகுதி நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), டி.வி.எஸ்.நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரே பாளையம், பழைய மத்திகிரி, எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர் கொத்தகண்ட பள்ளி,பொம்மாண்ட பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்".
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
- கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் ஆனேக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் தமிழக கிராம பகுதிகள் வழியாக இடம் பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் புகுந்தது.
இந்த காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
மூங்கில் காடுகளை கொண்ட அடர்ந்த கால்நடை பண்ணைக்குள் தஞ்சமடைந்த இந்த காட்டு யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.
இந்த ஏரியில் அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது. ஆனாலும் தொடர்ந்து மறுகரைக்குச் செல்ல நீந்தி வருகிறது. பல மணி நேரமாக காட்டு யானைகள் நீந்தி வருகிறது.
இந்த காட்டு யானைகள் ஏரி நீரில் நீந்தி மறுகரையில் உள்ள கால்நடை பண்ணைக்குள் செல்லும், இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கால்நடை பண்ணைக்குள் செல்லும் காட்டு யானைகளை வனத்துறையினர் இன்று மாலை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
- திடீரென்று ஆத்திரமடைந்த ராணுவத்தினர் அரசு பேருந்து நிறுத்தி பேருந்தில் ஏறி தமிழக அரசு ஓட்டுநரை தாக்கி உள்ளார்.
- குருபரப்ள்ளி போலீசார் உடனடியாக ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து ராணுவ போர் தடவாளங்களை ஏற்றுக்கொண்டு CISF மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவத்தினர் உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையில் 3 வாகனங்கள் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது குருபரப்பள்ளி அருகே வந்தபோது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டி ருந்த அரசு பேருந்து ராணுவ வாகனத்திற்கு இடம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் திடீரென்று ஆத்திரமடைந்த ராணுவத்தினர் அரசு பேருந்து நிறுத்தி பேருந்தில் ஏறி தமிழக அரசு ஓட்டுநரை தாக்கி உள்ளார்.
இதை அடுத்து அரசு பேருந்து ஓட்டினால் திடீரென்று சாலையில் பேருந்து மறைத்து நிறுத்தி ராணுவ வாகனங்களுக்கு முன்பு பொதுமக்கள் மற்றும் அரசு ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து தமிழக அரசு பேருந்து ஓட்டுனரை அடித்த இராணுவ அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அப்பகுதி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் ராணுவ அதிகாதிகாரிகளை சூழ்ந்து கொண்டு வாக்குவாததில் ஈடுபட்டனர்.
இதனால் ஐந்துக்கு மேற்பட்ட ராணுவத்தினர் துப்பாக்கி எடுத்து பொதுமக்கள் பார்த்து சுட முயன்றனர். இதனால் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குருபரப்ள்ளி போலீசார் உடனடியாக ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு ராணுவ த்தினர் ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இராணுவ அதிகாரிகளை இடத்தை விட்டு அனுப்ப முடியும் என போலிசாரிடம் வாக்குவாததில் ஈடுப்பட்டனர். பின்னர் பின்னர் போலீசார் சமதனாம் செய்து ராணுவ அதிகாரி பிரதாப் அவர்கள் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க பிறகு ராணுவ தளவாட வாகனங்கள் அனுப்பப்பட்டது. பின்னர் காயமடைந்து அரசு பேருந்து ஓட்டுனர் தமிழரசு அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
- மணக்கோலத்தில் தர்மரா ஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, எக்கூரில் பிரசித்தி பெற்ற, தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி திருக்கல்யாண வைபவ, உற்சவ விழா நேற்று நடந்தது.
இந்த கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31ல்,கங்கணம் கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று மேல தாளங்கள் முழங்க தட்டுவரிசையுடன் சென்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து, உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மணக்கோலத்தில் தர்மரா ஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாகுழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
- இசை இசைத்தும், பாடல்கள் பாடியும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர்.
- சிறு குழந்தைகள் உள்பட பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று பாரதிய இந்து சேவா பரிவார் என்ற அமைப்பின் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதி மண்டபத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் இசை இசைத்தும், பாடல்கள் பாடியும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் சிறு குழந்தைகள் உள்பட பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
திருவிளக்கு பூஜையின்போது, பெண்கள் வேத மந்திரங்கள் முழங்க விளக்கு ஏற்றி பூஜை நடத்தினர்.
கேரளா மாநிலத்தி லிருந்து ஓசூர் பகுதிகளுக்கு வந்து வாழ்ந்து வரும் ஏராளமான குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.






