என் மலர்
கிருஷ்ணகிரி
- மேலாண்மை இயக்குநர் சுந்தரம் பருத்தி ஏலத்தை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
- 20 டன் பருத்தியை ரூ.11 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.
மத்தூர்
கிருஷ்ணகிரி மா வட்டம் போச்சம்பள்ளி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.11 லட்சத்திற் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் பயிரிடபட்டு அறுவடை செய்த பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்து பயனடைந்தனர். இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியபாரிகள் கலந்து கொண்டு 20 டன் பருத்தியை ரூ.11 லட்சத்திற்கு ஏலம் எடுத்தனர். இதனால் நல்ல விலை போனதால் விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.
முன்னதாக துணைபதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுந்தரம் கலந்து கொண்டு பருத்தி ஏலத்தை தொடக்கி வைத்து பார்வையிட்டார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயபால் துணை தலைவர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொது மேலாளர் முருகன், அலுவலக பணியாளர்கள் விஜி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தனியார் செல்போன் டவரில் உதிரி பாகங்கள் திருடு போனது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பந்தாரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் செல்போன் டவரில் உதிரி பாகங்கள் திருடு போனது.
இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் கிருஷ்ணகிரி ராசுவிதி பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது28). இவர் அந்த நிறுவன செல்போன் டவர் டெக்னீசியன் என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பி.எஸ்.என்.எல். பொதுத்துறையில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
- விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மீதமுள்ள 8 சதவீத கருணைத் தொகை வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாற்றக்கோரி அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி முதல் வழங்க வேண்டிய 15 சதவீத உயர்வுடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பி.எஸ்.என்.எல். பொதுத்துறையில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 2018-ம் ஆண்டிலிருந்து அளிக்கப்பட வேண்டிய மருத்துவப்படிகளை வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மீதமுள்ள 8 சதவீத கருணைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதற்கு மாவட்டத் தலைவர் முனியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் கோரிக்கை குறித்து பேசினார். இணைச் செயலாளர் மாது நன்றி கூறினார்.
- உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்யப்படும்.
- உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்யப்படும்.உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். இந்த விழாவில், புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக 2,649 மாணவிகளுக்கு சான்றிதழ் கோப்புறை மற்றும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வங்கி அட்டைகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கி பேசியதாவது:-
இந்த திட்டத்தின் கீழ் தற்போது 45 கல்லூரிகளில் படிக்கும் 2,649 மாணவிகளுக்கு புதுமைப்பெண் சான்றிதழ் மற்றும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வங்கி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 6-ம் முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி முடிக்கும் வரை ரூ.1000 மாணவியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்தினால், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ முடியும். குழந்தை திருமணத்தை தடுக்க முடியும். பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைக்க முடியும். பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கப்படுகிறது.
உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்யப்படும். உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யப்படும். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் பயில வழிவகை செய்து அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். மேலும், உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதாந்திர உதவித்தொகையை பெற்று தங்களது மேற்படிப்பை முடித்து தங்களுக்கு விருப்பமான அரசு பணியில் சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவு கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
- சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஒசூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்தியவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.
தென் இந்தியாவிற்கான 8-வது தேசிய கராத்தே போட்டி பெங்களூரில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 5 வயது முதல் 13 வயது வரையிலான சுமார் 1500 மாணவர்கள் இந்த போட்டியில் பங்குபெற்றனர். இதில் ஓசூரில் உள்ள ஜப்பான் சோட்டேகான் கராத்தே அகாடமி என்ற பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டு ,11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் பெற்றும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் சுழற்கோப்பையை வென்றும் சாதனை புரிந்தனர். .
இதனைத் தொடர்ந்து, ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரவி, காரனேசன் கிளப் செயலாளர் திருப்பதிசாமி, கராத்தே சங்க மேலாளர் ஜெயராமன் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை.
- வருகிற, 6-ந் தேதிக்குள் கட்டத்தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்து வரி ரூ.3 கோடியே 65 லட்சமும், குடிநீர் கட்டணம் பாக்கி ரூ.3 கோடியே 3 லட்சமும், பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.81 லட்சம் உட்பட ரூ.7.50 கோடி மேல் வரி பாக்கி உள்ளது. வரிபாக்கி உள்ள தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரி பாக்கியை பலர் செலுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி கிருஷ்ணகிரி டி.பி., லிங்க் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜப்தி நோட்டீசை ஒட்டினர். அதில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை.
நிலுவைத்தொகையான ரூ.3 லட்சத்து, 21 ஆயிரத்து, 608-&ஐ வருகிற, 6-ந் தேதிக்குள் கட்டத்தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நேற்று வரை நிலுவை வரி தொகை செலுத்தாததால் நகராட்சி வருவாய் ஆய்வாளர் லூக்காஸ், வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் தனியார் மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் நகராட்சியில் வரி பாக்கி நிலுவையுலுள்ள அனைவரும் உடனடியாக வரியை கட்டுமாறும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 17 வயது இளம்பெண். இவர் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.
- இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் போலீ சார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகி ன்றனர்.
இதே போல் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் கடந்த 6-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் எனது மகளை சங்கம்பட்டியை சேர்ந்த சதீஸ் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- மத்திய பணியாளர் தேர்வாணையம் பணிக்கான 12,523 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.
- இந்த தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கான இலவச பயிற்சி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர் தேர்வாணையம் பணிக்கான 12,523 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசிநாள் வருகிற 17-ந் தேதி ஆகும்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- புளியமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சிட்ரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மங்குநாத் (வயது34). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மங்குநாத் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி கால்நடை பண்ணையில் உள்ள புளியமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்து 560 பணத்தை நிறுவனத்தில் கட்டாமல் இருந்துள்ளார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
நாமக்கல் மாவட்டம், நல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் ஓசூர் தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவர் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்து 560 பணத்தை நிறுவனத்தில் கட்டாமல் இருந்துள்ளார்.
இது குறித்து ஓசூர் போலீசில் அந்த நிறுவனத்தில் அதிகாரி கண்ணன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று அம்மாணவன் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே புளியூர் ஏரிக்கரை பகுதியில் இன்றுகாலை 6 வயது மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று அம்மாணவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாள் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- தேசிய நெடுஞ்சாலை அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதியில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், எருது விடும் விழா குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் பேசியதாவது;-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த சம்பந்தப்பட்ட விழாக்குழுவினர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இடம், நாள் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். காளைகளுக்கான உடற்தகுதி சான்று, எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர் பங்கேற்பது உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
மாற்று நபர்களுக்கு அனுமதி கிடையாது. எருது விடும் விழாவில் பங்கேற்கும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி ஏற்பாடுகள் 3 நாட்களுக்கு முன்பே முடிக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலை அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர்கள் ராஜேந்திரன், இளங்கோவன், மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் எருது விடும் விழா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






