கராத்தே போட்டியில் ஓசூர் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கராத்தே போட்டியில் ஓசூர் பள்ளி  மாணவ, மாணவிகள் சாதனை
Published on

ஒசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்தியவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

தென் இந்தியாவிற்கான 8-வது தேசிய கராத்தே போட்டி பெங்களூரில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 5 வயது முதல் 13 வயது வரையிலான சுமார் 1500 மாணவர்கள் இந்த போட்டியில் பங்குபெற்றனர். இதில் ஓசூரில் உள்ள ஜப்பான் சோட்டேகான் கராத்தே அகாடமி என்ற பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டு ,11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் பெற்றும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் சுழற்கோப்பையை வென்றும் சாதனை புரிந்தனர். .

இதனைத் தொடர்ந்து, ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரவி, காரனேசன் கிளப் செயலாளர் திருப்பதிசாமி, கராத்தே சங்க மேலாளர் ஜெயராமன் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com