என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
    • நாலிகாபெட்டாவில் சுமார் 6 ஏக்கர் நிலத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு தலைமை மருத்துவமனை, வேளாண் விளை பொருட்கள் வணிக வளாகம், உதவி கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நாலிகாபெட்டா ஆகிய இடங்களில், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்த அவர், நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, சித்தா மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பொது பிரிவுகளை பார்வையிட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், குடிநீர் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீராக வைத்திருக்க வேண்டும், மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அனைத்து வகையான நோய்களுக்கும் அரசு தலைமை மருத்துவமனையிலேயே தாமான சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக நிலம் தேர்வு செய்து அரசுக்கு முன்மொழிவுக்காக அனுப்பும் பொருட்டு ஓசூர் அருகே அச்செட்டிப் பள்ளி ஊராட்சி நாலிகாபெட்டாவில் சுமார் 6 ஏக்கர் நிலத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஓசூர் சந்தை அருகில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை வணிக வளாகத்தில் ரூ 3 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்காடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் அனைத்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டப் பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தவிட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பின்னர், சப்- கலெக்டர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின்போது, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், ஓசூர் அரசுமருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி, தாசில்தார் கவாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, பூபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • வீட்டின் அருகே தெருவில் உள்ள பொதுக்குழாயில் பிரியா துணி துவைத்து கொண்டிருந்தார்.
    • ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பில் சேர்ந்து பிரியா, தரப்பினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது28). ராணுவவீரரான இவரது மனைவி பிரியா. பிரபுவின் சகோதரர் பிரபாகரன். இவரும் ராணுவ வீராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே தெருவில் உள்ள பொதுக்குழாயில் பிரியா துணி துவைத்து கொண்டிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி (55) என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பில் ராஜாபாண்டி, பூபதி, கருணாநிதி, குருசூரியமூர்த்தி, வேடியப்பன் ஆகியோர் சேர்ந்து பிரியா, பிரபு, பிரபாகரன், தேவராஜ், மாதையன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக பிரியா நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று சின்னசாமி, ராஜாபாண்டி, பூபதி, கருணாநிதி, குருசூரியமூர்த்தி, வேடியப்பன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைதான அவர்களை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • மாணவ மாணவியர்கள் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் சிறப்பு கையேடும் பயன்படும்
    • உயர் கல்வித்துறையில் ஆண்டுதோறும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமையை சேர்க்கும் கல்லூரியாக அறிஞர் அண்ணா கல்லூரி திகழ்ந்து வருகிறது

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய நான் முதல்வன் திட்டத்தின் படி அரசுப் பள்ளியில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு கையேடு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் முதல்வர் தனபால் வரவேற்புரை ஆற்றினார். வேளாங்கண்ணி கல்விக் குழுமம் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளர் கூத்தரசன் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தன்னுடைய தலைமை உரையில் கல்லூரியில் வழங்கப்படும் சிறப்பு கையேடு மாணவ, மாண வியர் பொது த்தேர்வில் அனைத்து பாடங்களையும் நினைவுப் படுத்தி திருப்புதல் செய்வதற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்று பேசினார்.

    விழாவில் பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர் மோகனசுந்தரம் சிகரத்தை நோக்கி என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். தன்னுடைய சிறப்பு உரையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு அவசியம் . மாணவ மாணவியர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் சேவை வணங்குவதற்கு உரியது. அறிஞர் அண்ணா கல்லூரியில் வழங்கும் சிறப்பு கையேடுகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். உயர் கல்வித்துறையில் ஆண்டுதோறும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமையை சேர்க்கும் கல்லூரியாக அறிஞர் அண்ணா கல்லூரி திகழ்ந்து வருகிறது . மாணவ மாணவியர்கள் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் சிறப்பு கையேடும் பயன்படும் என்று பேசினார். விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய 3500-க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்பட்டன. விழாவில் வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் பள்ளி முதல்வர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவினை கல்லூரி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நேற்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், துணை தாசில்தார் சிதம்பரம், கலெக்டர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, 10ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இக்காலனியில் வாழும் மக்களில் பெரும்பா லானோர் தமிழகத்தை சேர்ந்த வர்களாக உள்னர்.
    • மும்பை அலர்ட் இந்தியா அமைப்பிற்கு ரூ.65 லட்சத்து 60 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஐவிடிபி நிறுவனம் கடந்த 44 ஆண்டுகளாக மகளிர் மேம்பாட்டுப் பணிகள், கல்வி, மருத்துவம், சுகாதாரம், பேரிடர் நிவார ணம் மற்றும் இருளர் இன மேம்பாட்டு பணிகள் என பல்வேற நலப்பணிகளை செய்து வருகிறது.

    அதன்படி, மும்பையை சார்ந்த தொழு நோயாளர் காலனியில் செயல்படும் அபினர் தன்யன் மந்திர் பொது அறக்கட்டளையை சார்ந்த பள்ளியில் பயிலும்400 மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியலை கற்பிக்க போதிய அளவு கணினிகள் இல்லை என்பதால், கணினி ஆய்வகம் அமைக்க உதவிடுமாறு பள்ளி நிர்வாகத்தினர் ஐவிடிபியை அணுகினர்.

    இதையடுத்த ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ், அப்பள்ளிக்கு ரூ.6.10 லட்சம் மதிப்பிலான 16 கணினிகளை வழங்கி, அக்கணினி ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

    மேலும் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரி யர்களின் சேவையை பாராட்டி ரூ.1.30 லட்சம் மதிப்பிலான டின்னர்செட்டுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மும்பை அலர்ட் இந்தியா நிறுவனர் அந்தோணிசாமி, பள்ளியின் நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இது குறித்து ஐவிடிபி நிறுவனர் கூறுகையில், இக்காலனியில் வாழும் மக்களில் பெரும்பா லானோர் தமிழகத்தை சேர்ந்த வர்களாக உள்னர்.

    மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்களும் தமி ழ்நாட்டை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர்.

    இதுவரை தொழுநோய் நிவாரணப் பணிக்காக ஐவிடிபி நிறுவனம் சார்பில் மும்பை அலர்ட் இந்தியா அமைப்பிற்கு ரூ.65 லட்சத்து 60 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது என்றார். 

    • முதலில் நட்பாக பழகிய நிஷோர் சிவசங்கர், திரு மணம் செய்ய வற்புறுத்தி இளம் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • இளம்பெண், வாலிபரின் எண்ணை பிளாக் செய்து விட்டு நட்பையும் முறித்துக் கொண்டார்.

    மத்தூர், 

    குமரி மாவட்டம் கப்பி யரை வேளாண் கோடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சமூகவலைதளங்களில் ஒன்றான முகநூலில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.

    அப்போது அவருக்கு முகநூல் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரெட்டியார்தோட்டம் பகுதி யைச் சேர்ந்த நிஷோர் சிவ சங்கர் (வயது 24) என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டது.

    முதலில் நட்பாக பழகிய நிஷோர் சிவசங்கர், ஒரு கட்டத்தில் திரு மணம் செய்ய வற்புறுத்தி இளம் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண், வாலிபரின் எண்ணை பிளாக் செய்து விட்டு நட்பையும் முறித்துக் கொண்டார்.

    அதன்பிறகு இரணியல் அருகே உள்ள பேயன்குழியில் உறவினர் வீட்டில் இளம்பெண் தங்கி உள்ளார். இதனை அறிந்த நிஷோர் சிவசங்கர் நேற்று அங்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும் இளம் பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதை பார்த்த பெண்ணின் தாயார், உறவு பெண் ஆகியோர் நிஷோர் சிவசங்கரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் 3 பெண்களையும் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் பலத்த காய மடைந்த பெண்ணின் தாயார், உறவுப் பெண் இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் நிஷோர் சிவசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • 2 பேர் திருடியதாக பாகலூர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்டம், ஓமலூர் செங்கரபு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது39). இவரது டிப்பர் லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி நரிப்புரம் பகுதியை சேர்ந்த முருகேசன், ஓசூர் தும்மனப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 2 பேர் திருடியதாக பாகலூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், சனமங்கலம் வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி திருடு போனது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது57), இவர் துணி வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 2-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி மற்றும் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளைஞர்கள் மத்தியில் இந்த நாளை நினைத்தாலே ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.
    • காதலர் தினத்தில் இடம் பெறும் ஓசூர் ரோஜாக்களுக்கு உலகம் முழுவதுமே ஒரு மவுசு உண்டு.

    பிப்ரவரி,

    இளைஞர்கள் மத்தியில் இந்த நாளை நினைத்தாலே ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அதுதான் காதலர் தினம். உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா மலர்கள். அவற்ரை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் திகழ்வது கிருஷ்ணகிரி மாவட்டம்.

    காதலர் தினத்தில் மோதிரம் மாற்றுவது, ரோஜாக்கள் வழங்குவது போல மலர்ச்செடிகள் வழங்கும் வழக்கம் அதிகமாகிவிட்டது.

    காதலர் தினத்தில் இடம் பெறும் ஓசூர் ரோஜாக்களுக்கு உலகம் முழுவதுமே ஒரு மவுசு உண்டு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமைக்குடில் மூலம் ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, திறந்தவெளி வயல்களில் பன்னீர் மற்றும் பட்டன் ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான ரோஜா சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஓசூர் அருகே பாகலூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அகலக்கோட்டை, பாலதோட்டனப்பள்ளி, மரகத தொட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட கிராமங்களில் நாற்றுப் பண்ணைகள் அமைத்து ரோஜா செடி நாற்றுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இங்கு சென்ட் ரோஜா எனப்படும் பன்னீர் ரோஜாக்கள், பட்டன், கில்லி எல்லோ, மூக்குத்தி, மேங்கோ எல்லோ, நோப்ளஸ், நிராபல், தாஜ்மஹால் உட்பட 50-க்கும் மேற்பட்ட தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பட்டன.

    காதலர் தினத்துக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த நாற்றுக்கள் செடியாக வளர்ந்து பூக்க தொடங்கிவிட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா ஊரடங்கின்போது, திறந்தவெளியில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் பலர் பெரும் வருவாய் இழப்பை சந்தித்ததால், தோட்டத்தில் செடிகளை அழித்தனர். இதனால் மலர் செடி நாற்றுகளின் விற்பனையும் வெகுவாக சரிந்தது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மலர் சந்தைகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால், மீண்டும் மலர் தோட்டங்கள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மலர் நாற்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்செடி நாற்றுகள், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    காதலர் தின கொண்டாட்டத்தில் காதல ர்கள் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள மலர்களை வழங்குவதற்கு பதிலாக, மலர் செடிகளை வழங்கி வருகின்றனர். இதனால் மலர் செடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

    ப ண்டிகை கொண்டாட்டங்களுக்காக அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மலர் செடி நாற்றுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    சமீப காலமாக திருமண நிகழ்வுகளில் தாம்பூலத்தோடு மரக்கன்று அல்லது மலர்ச்செடிகள் வழங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மலர் செடிகள் விற்பனை அதிகமாகி உள்ளது. அகலகோட்டை, மேடுமுத்துகோட்டை, ஒசட்டி, பாலதொட்டனப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரோஜா நாற்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா நாற்று செடிகள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த செடிகளை வாங்க தற்போது அகலகோட்டை கிராமத்திற்கு அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வரத்தொடங்கியுள்ளனர். சென்னை போன்ற நகர பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கையை நேசிக்கும் வகையில் மாடித்தோட்டம், வீடுகளில் செடிகள் வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி வருவதால் அங்கு ரோஜா, ஜெர்பரா, உள்ளிட்ட கொய்மலர் செடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரோஜா தொழிலை சார்ந்து வாழும் கூலித்தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அகலக்கோட்டை கிராமத்தில் முன்பு அதிகளவில் ராகி பயிரிடப்பட்டது. தற்போது இங்குள்ள விவசாயிகள் பலரும் மலர்செடிகள் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் நர்சரி தொழில் இங்கு பிரதானமாகிவிட்டது. இங்கு உற்பத்தியாகும் மலர்ச்செடிகளுக்கு கேரளாவில் வரவேற்பு உள்ளது. இதனால் கேராளாவுக்கு அதைகளவில் மலர்ச்செடிகள் அனுப்பப்படுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் இங்கிருந்து கேரளாவுக்கு மலர்ச்செடிகள் கொண்டு சென்று அங்கும் நர்சரி கார்டன் அமைத்து விற்பனை செய்கிறார்கள். பெங்களூருவுக்கும் இங்கிருந்து மலர்செடிகள் செல்கின்றன. காதலர்களை பொருத்தவரை மலர்கள் மற்றும் மலர்செடிகளை அதிக விலை கொடுத்தும் வாங்குவதால் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். காதலர்தினம் நெருங்கிவரும் வேளையில் ரோஜா மலர்கள், மலர்செடிகள் விலையும் அதிகரித்து உள்ளது.

    இது தொடர்பாக நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு முன்பு பன்னீர், பட்டன் ரோஜா சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. ஊரடங்கின் போது, மலர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், செடி களை பராமரிக்க முடியாமல், செடி களை விவசாயிகள் அழித்தனர். கடந்த சில மாதங்களாக உள்ளூரில் மலர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதனால், எதிர்வரும் திருமணம், கோவில் திருவிழாக்களுக்கு மலர்களின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், கடந்த காலங்களைப்போல வெளி மாநில, மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகள் பலர் மீண்டும் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாற்றுப் பண்ணை களில் நாற்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு நாற்று ரூ.15 முதல் ரூ.20 வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கவுரவவிரிவுரை யாளர்களுக்கு கிடைக்கும் தொகுப்பூதியமும் போதுமானதாக இல்லை.
    • கவுரவ விரிவுரையாளர் சங்கங்களை சேர்ந்த, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில், 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். கவுரவ விரிவுரையாளர்களாக, 59 பேர் பணிபுரிகிறார்கள். இவர்களில், பலர் கடந்த, 20 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு பணியாற்றி வருகிறார்கள். யாரும் நிரந்தரமாக்கப்படவில்லை. பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகள் படி தகுதியுள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    கடந்த ஆட்சியில் அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்தனர். தேர்தலுக்கு பின் தற்போதைய அரசு அதை செயல்படுத்தவில்லை. கவுரவவிரிவுரை யாளர்களுக்கு கிடைக்கும் தொகுப்பூதியமும் போதுமானதாக இல்லை. அதையும் முறையாக வழங்குவதில்லை.

    தமிழகம் முழுவதும் அரசு கல்லூரி அனைத்து கவுரவ விரிவுரையாளர் சங்கங்களை சேர்ந்த, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிரந்தர பணி, சமவேலை சமஊதியம் கிடைக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பால்ராஜ், செந்தில், முரளி, ராஜா, ஸ்ரீதர், சென்னகிருஷ்ணன், கனகராஜ், வடிவேலு உள்பட, 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அர்ச்சகர் வாசீஸ்வரன், ராமானுஜ பட்டாச்சாரியார், அறிவானந்தம் ஆகியோர் பேசினார்கள்.
    • இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அர்ச்சகர்களும் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

    மலைக் கோவிலில் இந்த முகாமினை இந்து சமய அறநிலைய த்துறையின் கிருஷ்ணகிரி பிரிவு உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமி நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து முகாமில் பேசினார். தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, மலைக ்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன், ராமானுஜ பட்டாச்சாரியார், அறிவானந்தம் ஆகியோர் பேசினார்கள். மேலும் இதில் தலைமை எழுத்தர் கோவிந்தராஜ், செயல் அலுவலர்கள் சின்னசாமி, சித்ரா, ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, சத்யா, அண்ணாதுரை மற்றும் பணியாளர் சசிகுமார் ஆகியோரும்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அர்ச்சகர்களும் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம், தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும். பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தெரிவித்தார்.

    ×