என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகநூல் மூலம் பழகிய பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி தாக்கிய வாலிபர் கைது
- முதலில் நட்பாக பழகிய நிஷோர் சிவசங்கர், திரு மணம் செய்ய வற்புறுத்தி இளம் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
- இளம்பெண், வாலிபரின் எண்ணை பிளாக் செய்து விட்டு நட்பையும் முறித்துக் கொண்டார்.
மத்தூர்,
குமரி மாவட்டம் கப்பி யரை வேளாண் கோடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சமூகவலைதளங்களில் ஒன்றான முகநூலில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.
அப்போது அவருக்கு முகநூல் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரெட்டியார்தோட்டம் பகுதி யைச் சேர்ந்த நிஷோர் சிவ சங்கர் (வயது 24) என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டது.
முதலில் நட்பாக பழகிய நிஷோர் சிவசங்கர், ஒரு கட்டத்தில் திரு மணம் செய்ய வற்புறுத்தி இளம் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண், வாலிபரின் எண்ணை பிளாக் செய்து விட்டு நட்பையும் முறித்துக் கொண்டார்.
அதன்பிறகு இரணியல் அருகே உள்ள பேயன்குழியில் உறவினர் வீட்டில் இளம்பெண் தங்கி உள்ளார். இதனை அறிந்த நிஷோர் சிவசங்கர் நேற்று அங்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும் இளம் பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதை பார்த்த பெண்ணின் தாயார், உறவு பெண் ஆகியோர் நிஷோர் சிவசங்கரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் 3 பெண்களையும் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் பலத்த காய மடைந்த பெண்ணின் தாயார், உறவுப் பெண் இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் நிஷோர் சிவசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.