என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா மலர்கள் விற்பனை களை கட்டியது"

    • இளைஞர்கள் மத்தியில் இந்த நாளை நினைத்தாலே ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.
    • காதலர் தினத்தில் இடம் பெறும் ஓசூர் ரோஜாக்களுக்கு உலகம் முழுவதுமே ஒரு மவுசு உண்டு.

    பிப்ரவரி,

    இளைஞர்கள் மத்தியில் இந்த நாளை நினைத்தாலே ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அதுதான் காதலர் தினம். உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா மலர்கள். அவற்ரை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் திகழ்வது கிருஷ்ணகிரி மாவட்டம்.

    காதலர் தினத்தில் மோதிரம் மாற்றுவது, ரோஜாக்கள் வழங்குவது போல மலர்ச்செடிகள் வழங்கும் வழக்கம் அதிகமாகிவிட்டது.

    காதலர் தினத்தில் இடம் பெறும் ஓசூர் ரோஜாக்களுக்கு உலகம் முழுவதுமே ஒரு மவுசு உண்டு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமைக்குடில் மூலம் ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, திறந்தவெளி வயல்களில் பன்னீர் மற்றும் பட்டன் ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான ரோஜா சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஓசூர் அருகே பாகலூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அகலக்கோட்டை, பாலதோட்டனப்பள்ளி, மரகத தொட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட கிராமங்களில் நாற்றுப் பண்ணைகள் அமைத்து ரோஜா செடி நாற்றுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இங்கு சென்ட் ரோஜா எனப்படும் பன்னீர் ரோஜாக்கள், பட்டன், கில்லி எல்லோ, மூக்குத்தி, மேங்கோ எல்லோ, நோப்ளஸ், நிராபல், தாஜ்மஹால் உட்பட 50-க்கும் மேற்பட்ட தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடப்பட்டன.

    காதலர் தினத்துக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த நாற்றுக்கள் செடியாக வளர்ந்து பூக்க தொடங்கிவிட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா ஊரடங்கின்போது, திறந்தவெளியில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் பலர் பெரும் வருவாய் இழப்பை சந்தித்ததால், தோட்டத்தில் செடிகளை அழித்தனர். இதனால் மலர் செடி நாற்றுகளின் விற்பனையும் வெகுவாக சரிந்தது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மலர் சந்தைகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால், மீண்டும் மலர் தோட்டங்கள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மலர் நாற்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்செடி நாற்றுகள், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    காதலர் தின கொண்டாட்டத்தில் காதல ர்கள் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள மலர்களை வழங்குவதற்கு பதிலாக, மலர் செடிகளை வழங்கி வருகின்றனர். இதனால் மலர் செடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

    ப ண்டிகை கொண்டாட்டங்களுக்காக அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மலர் செடி நாற்றுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    சமீப காலமாக திருமண நிகழ்வுகளில் தாம்பூலத்தோடு மரக்கன்று அல்லது மலர்ச்செடிகள் வழங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மலர் செடிகள் விற்பனை அதிகமாகி உள்ளது. அகலகோட்டை, மேடுமுத்துகோட்டை, ஒசட்டி, பாலதொட்டனப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரோஜா நாற்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா நாற்று செடிகள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த செடிகளை வாங்க தற்போது அகலகோட்டை கிராமத்திற்கு அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வரத்தொடங்கியுள்ளனர். சென்னை போன்ற நகர பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கையை நேசிக்கும் வகையில் மாடித்தோட்டம், வீடுகளில் செடிகள் வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி வருவதால் அங்கு ரோஜா, ஜெர்பரா, உள்ளிட்ட கொய்மலர் செடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரோஜா தொழிலை சார்ந்து வாழும் கூலித்தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அகலக்கோட்டை கிராமத்தில் முன்பு அதிகளவில் ராகி பயிரிடப்பட்டது. தற்போது இங்குள்ள விவசாயிகள் பலரும் மலர்செடிகள் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் நர்சரி தொழில் இங்கு பிரதானமாகிவிட்டது. இங்கு உற்பத்தியாகும் மலர்ச்செடிகளுக்கு கேரளாவில் வரவேற்பு உள்ளது. இதனால் கேராளாவுக்கு அதைகளவில் மலர்ச்செடிகள் அனுப்பப்படுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் இங்கிருந்து கேரளாவுக்கு மலர்ச்செடிகள் கொண்டு சென்று அங்கும் நர்சரி கார்டன் அமைத்து விற்பனை செய்கிறார்கள். பெங்களூருவுக்கும் இங்கிருந்து மலர்செடிகள் செல்கின்றன. காதலர்களை பொருத்தவரை மலர்கள் மற்றும் மலர்செடிகளை அதிக விலை கொடுத்தும் வாங்குவதால் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். காதலர்தினம் நெருங்கிவரும் வேளையில் ரோஜா மலர்கள், மலர்செடிகள் விலையும் அதிகரித்து உள்ளது.

    இது தொடர்பாக நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு முன்பு பன்னீர், பட்டன் ரோஜா சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. ஊரடங்கின் போது, மலர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், செடி களை பராமரிக்க முடியாமல், செடி களை விவசாயிகள் அழித்தனர். கடந்த சில மாதங்களாக உள்ளூரில் மலர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதனால், எதிர்வரும் திருமணம், கோவில் திருவிழாக்களுக்கு மலர்களின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், கடந்த காலங்களைப்போல வெளி மாநில, மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளது. எனவே, விவசாயிகள் பலர் மீண்டும் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாற்றுப் பண்ணை களில் நாற்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு நாற்று ரூ.15 முதல் ரூ.20 வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×