என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மும்பை தொழுநோய் காலனி பள்ளிக்கு ரூ.7.40 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வகம், டின்னர் செட்
    X

    மும்பை தொழுநோய் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு ஐவிடிபி நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் ரூ.7.40 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வகம் மற்றும் ஆசிரியர்களுக்கு டின்னர் செட்டுகளை வழங்கினார். 

    மும்பை தொழுநோய் காலனி பள்ளிக்கு ரூ.7.40 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வகம், டின்னர் செட்

    • இக்காலனியில் வாழும் மக்களில் பெரும்பா லானோர் தமிழகத்தை சேர்ந்த வர்களாக உள்னர்.
    • மும்பை அலர்ட் இந்தியா அமைப்பிற்கு ரூ.65 லட்சத்து 60 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஐவிடிபி நிறுவனம் கடந்த 44 ஆண்டுகளாக மகளிர் மேம்பாட்டுப் பணிகள், கல்வி, மருத்துவம், சுகாதாரம், பேரிடர் நிவார ணம் மற்றும் இருளர் இன மேம்பாட்டு பணிகள் என பல்வேற நலப்பணிகளை செய்து வருகிறது.

    அதன்படி, மும்பையை சார்ந்த தொழு நோயாளர் காலனியில் செயல்படும் அபினர் தன்யன் மந்திர் பொது அறக்கட்டளையை சார்ந்த பள்ளியில் பயிலும்400 மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியலை கற்பிக்க போதிய அளவு கணினிகள் இல்லை என்பதால், கணினி ஆய்வகம் அமைக்க உதவிடுமாறு பள்ளி நிர்வாகத்தினர் ஐவிடிபியை அணுகினர்.

    இதையடுத்த ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ், அப்பள்ளிக்கு ரூ.6.10 லட்சம் மதிப்பிலான 16 கணினிகளை வழங்கி, அக்கணினி ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

    மேலும் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரி யர்களின் சேவையை பாராட்டி ரூ.1.30 லட்சம் மதிப்பிலான டின்னர்செட்டுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மும்பை அலர்ட் இந்தியா நிறுவனர் அந்தோணிசாமி, பள்ளியின் நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இது குறித்து ஐவிடிபி நிறுவனர் கூறுகையில், இக்காலனியில் வாழும் மக்களில் பெரும்பா லானோர் தமிழகத்தை சேர்ந்த வர்களாக உள்னர்.

    மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்களும் தமி ழ்நாட்டை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர்.

    இதுவரை தொழுநோய் நிவாரணப் பணிக்காக ஐவிடிபி நிறுவனம் சார்பில் மும்பை அலர்ட் இந்தியா அமைப்பிற்கு ரூ.65 லட்சத்து 60 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×