என் மலர்
கிருஷ்ணகிரி
- போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அத்திகானூர் சிவன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள அத்திகானூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அத்திகானூர் சிவன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லோகதாசன், மகேந்திரன், சந்தோஸ், பிரகாஷ் ஆகிய 4 பேர் என்பது ெதரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
- கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- உறுதிமொழியை படிக்க, அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி படித்து ஏற்றுக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதற்கு கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள், கல்லூரி தலைவர் வள்ளிபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலை கல்லூரி முதுல்வர் ஆறுமுகம், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கல்லூரி தாளாளர் மற்றும் தலைவர் ஆகியோர் உறுதிமொழியை படிக்க, அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி படித்து ஏற்றுக் கொண்டனர். இதில் நிர்வாக அலுவலர் சுரேஷ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கழிவுநீர் கால்வாய்கள் கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளன.
- சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 6-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.
மேலும் 15-வது வார்டு கணேஷ் காலனியில் மயானத்திற்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாததால் மயானத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கெலமங்கலம் பேரூராட்சியில் சாலைகள் அமைத்து கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 34 விண்ணப்பங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் என மொத்தம் 674 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது
- கல்வி உதவித்தொகை மாணவியர்களின் வங்கி கணக்கில் செலுதத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் - புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் வங்கி மேலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசின் முன்னோக்கு திட்டமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் & புதுமைப் பெண் திட்டம் தமிழக முதல்வரால் முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதியன்றும், இரண்டாம் கட்டமாக கடந்த 8-ந் தேதியன்றும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் மொத்தமாக 4,152 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 3,023 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 388 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 741 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. அதில் பள்ளிகளில் 52 விண்ணப்பங்களும், வங்கியில் 668 விண்ணப்பங்களும், பள்ளி மற்றும் வங்கியில் 21 விண்ணப்பங்களும் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.
வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாமல் 379 விண்ணப்பங்கள் இந்தியன் வங்கியிலும், 162 விண்ணப்பங்கள் பாரத ஸ்டேட் வங்கியிலும், 99 விண்ணப்பங்கள் கனரா வங்கியிலும், 34 விண்ணப்பங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் என மொத்தம் 674 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. மேலும், 15 விண்ணப்பங்கள் வங்கி குறிக்கப்படாமலும் உள்ளது.
எனவே, வங்கியாளர்கள் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, கல்வி உதவித்தொகை மாணவியர்களின் வங்கி கணக்கில் செலுதத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மின் ஆளுமை மாவட்ட மேலாளர் மற்றும் வங்கி மேலாளர்கள், கல்லூரி நிர்வாகிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- இது தொடர்பாக டவுன் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், சின்ன கம்மியாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது27). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் சரவணன், ராஜா, அருள் ஆகிய மூன்று பேரும் டீசல் திருடி கொண்டிருந்தனர்.
அப்ேபாது கார்த்திக் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக டவுன் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓசூர் கலவரம் போலீசார் தோல்விக்கு எடுத்துக்காட்டு என விமர்சித்தார்.
- இந்த போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் கடந்த 2-ந் தேதி எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்க தாமதம் ஆனதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓசூர் கலவரம் போலீசார் தோல்விக்கு எடுத்துக்காட்டு என விமர்சித்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, மஹாரா ஜகடை, காவேரிப்பட்டினம் என மொத்தம் 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
- கோவில் தேர்த் திருவிழா, அடுத்த (மார்ச்) மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது.
- அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர் கோவில் தேர்த் திருவிழா, அடுத்த (மார்ச்) மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி பால் கம்பம் நடும் விழா நேற்று ஓசூர் தேரிபேட்டையில், கல்யாண சூடேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.மனோகரன் மற்றும் கே.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு பூஜைகள் செய்து, தேர்பேட்டையை சுற்றி வாத்திய முழக்கத்துடன் வீதி உலாவாக பால் கம்பம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மலைக்கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன்,அ.தி.மு.க. பகுதி செயலாளர் ராஜி,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், கல்யாண சூடேஸ்வரர் தேர் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவைத் தொடர்ந்து தேர் கட்டும் பணிகள் தொடங்கியது.
தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள், வருகிற 28-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மார்ச் 1-ந்தேதி கொடியேற்றம் மற்றும் மலையிலிருந்து சாமி கீழே அழைத்து வரப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகளும், அதனைத்தொடர்ந்து 6-ந்தேதி வரை பல்வேறு உற்சவங்கள், பூஜைகளும், 6-ந் தேதி இரவு சாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். மறுநாள் 7-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
- 3- ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் படிக்கும் பள்ளிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நொறுக்கு தீணிக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை சேர்த்து வைத்துள்ளார்.
- உண்டியலில் இருந்த பணத்தை அப்படியே கொண்டுவந்து ஆசிரியரிடம் வழங்கியுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் அரசு நிதியில் சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பள்ளியில் 3- ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் படிக்கும் பள்ளிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நொறுக்கு தீணிக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த உண்டியலில் இருந்த பணத்தை அப்படியே கொண்டுவந்து ஆசிரியரிடம் வழங்கியுள்ளார்.
பின்னர் இந்த தகவல் அறிந்த அந்த மாணவனின் தந்தை அகரம் பேருந்து நிலையம் அருகே நகை அடகு கடை வைத்திருக்கும் சீனிவாசன் அந்த பள்ளி வகுப்பறைக்கு தேவையான டைல்ஸ் மற்றும் அதற்கு தேவையான மூலப்பொருள்களை தாமாக முன்வந்து வழங்கினார். இந்த தகவல் அப்பகுதி மக்கள் பயணிக்கும் வாட்சாப் மற்றும் முகநூலில் வைரலாக பரவியது.
இதன் காரணமாக அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களால் முடிந்த நிதியை அந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தாமாக முன் வந்து வழங்குகின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவன் கொடுத்த சிறு தொகை தற்பொழுது அந்த பள்ளி வளர்ச்சி நிதியாக அதிகரிக்க உதாரணமாக இருந்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- இருவரையும் பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் பழைய பேட்டை கொட்டபெட்டா காலனி பகுதியை சேர்ந்தவர் உண்ணாமலை (வயது36). இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் லண்டன் பேட்டை பகுதியை சேர்ந்த கிரி, பழைய பேட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி ஆகிய இருவரும் உண்ணாமலை வளர்த்து வந்த ஆடுகளை திருடும்போது கையும் களவுமாக பிடிப்பட்டனர்.
இருவரையும் பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது ெதாடர்பாக டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
- 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கை பேரணி நேற்று மாலை நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த பேரணி காந்திசிலை அருகே புறப்பட்டு டி.பி., சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் நிறைவடைந்தது.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்கள், எம்.டி.எம்., சுகாதார ஆய்வாளர்கள், எம்.எல்.எச்.பி., ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
- போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் கடந்த 2-ந் தேதி எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்க தாமதம் ஆனதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓசூர் கலவரம் போலீசார் தோல்விக்கு எடுத்துக்காட்டு என விமர்சித்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, மஹாராஜகடை, காவேரிப்பட்டினம் என மொத்தம் 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் மாவட்ட தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
- மாலை 5 மணியளவில் பணி முடித்துவிட்டு ஊழியர்கள் செல்ல இருந்தனர்.
- போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜே.பாப்பானூர் கிராமத்தில் தென்னை நார் மில் நடத்தி வருபவர் சரஸ்வதி. இவரது நார் மில்லில் 15-ற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வரும் நிலையில் மாலை 5 மணியளவில் பணி முடித்துவிட்டு ஊழியர்கள் செல்ல இருந்தனர்.
அப்போது மின்கசிவு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு நார் தீ பிடித்து எரிய தொடங்கியது. அடுத்தடுத்து குவித்து வைத்துள்ள நார் குவியல்கள் தீ பிடித்து எரியத்துங்கியது. விபரமறிந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள்ளாக நார்மில்லின் மோட்டார், பெல்ட், இயந்திரங்கள் உள்ளிட்ட சுமார் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.






