என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிப்பு
- கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- உறுதிமொழியை படிக்க, அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி படித்து ஏற்றுக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதற்கு கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள், கல்லூரி தலைவர் வள்ளிபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலை கல்லூரி முதுல்வர் ஆறுமுகம், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கல்லூரி தாளாளர் மற்றும் தலைவர் ஆகியோர் உறுதிமொழியை படிக்க, அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி படித்து ஏற்றுக் கொண்டனர். இதில் நிர்வாக அலுவலர் சுரேஷ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






