என் மலர்
கிருஷ்ணகிரி
- ராகுல்காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
- மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ராகுல்காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நடராஜன், முரளிதரன் ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.
இதில் 17- வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் ஆண்,பெண் என தனியாக நடத்தப்பட்ட இந்த மினி மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இன்றி தருமபுரி மாவட்டத்திலும் இருந்து ஏராளமான இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்கள்.
இதில் அண்ணாசிலையில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் காத்தி சிலை, ரவுண்டானா, பெரியமாரியம்மன் கோவில், ராசு விதி, திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆவின் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிக்கம், கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் விக்னேஷ் பாபு, முன்னாள் ஊத்தங்கரை சேர்மன் ஆறுமுகம், மாவட்டத் துணைத்தலைவர் ஹரி, நகரத் தலைவர் முபாரக், லலித் ஆண்டனி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சியின் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம் சுப்பிரமணி, என ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்கள். மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்கள்.
- ஆத்திரமடைந்த மஞ்சு, மதுகுமாரை கல்லால் தாக்கினார்.
- மஞ்சுவும், அவரது நண்பர்களும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் (51) என்பவரை தாக்கினர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம் கிராமத்தில் கல் குவாரிகள் உள்ளன. இந்த கல் குவாரிகளுக்கு தினமும் ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஆகியவற்றை ஏற்றி செல்ல டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன.
இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அடவிசாமிபுரம் பகுதியில் சென்ற டிப்பர் லாரிகளை அதே பகுதியை சேர்ந்த மஞ்சு மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து டிரைவர்களிடம் தகராறு செய்தனர்.
இதை அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். அப்போதும் மஞ்சுவுக்கும், அதேபகுதியை சேர்ந்த மதுகுமார் (வயது24) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சு, மதுகுமாரை கல்லால் தாக்கினார்.
அதனை தடுக்க சென்ற அவரது தந்தை முனிராஜ் (50) என்பவரையும் மஞ்சு தாக்கினார். இதில் தந்தை-மகன் 2 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுவும், அவரது நண்பர்களும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் (51) என்பவரை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சானமாவு வனப்பகுதியில் 80 யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.
- இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 60 யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள், இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று மீண்டும் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து சானமாவு வனப்பகுதிக்கு மேலும் 20 காட்டு யானைகள் இடம்பெயர்ந்தன. இதனால் சானமாவு வனப்பகுதியில் தற்போது 80 யானைகள் முகாமிட்டுள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இந்த யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த காட்டு யானைகளை 15 மணி நேரம் போராடி 40 வன ஊழியர்கள் இன்றுகாலை தேன்கனிக்கோட்டை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- சுகாதாரம் டெங்கு மர்ம காய்ச்சல் வராமல் இருக்க பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
- பழுதான அரசு கட்டிடங்கள் இடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சூளகிரி ஊராட்சிஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகேஷ், ரத்னம்மா, யசோதா, லஷ்மம்மா, பாக்கி யவதி, புஷ்பா, தமிழ்செல்வி, மஞ்சுளா, சங்கீதா, லதா, முனிரத்தனா, முனிராஜ், வரதன், சேட்டு, சீதாராமன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி பிரச்சனைகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றிற்கான நிதி ஒதிக்கீடு செய்து பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினர். சுகாதாரம் டெங்கு மர்ம காய்ச்சல் வராமல் இருக்க பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. பழுதான அரசு கட்டிடங்கள் இடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்னண், சிவகுமார், பொறியாளர்கள் சுமதி, ஷியாமளா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூகிலன், உமா சங்கர், மேற்பார்வை யாளர்கள் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி, கங்கலேரி ஊராட்சி மற்றும் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
2022-23ம் நிதியாண்டில் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த எண்ணேக்கொள் மற்றும் 122 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள், ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் 50 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், ஓசூர் ஒன்றியம் தேவேரிப்பள்ளி மற்றும் 23 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், நாகொண்டப்பள்ளி மற்றும் 27 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,
கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்ைட மற்றும் 28 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், பர்கூர் ஒன்றியம் சிகரலப்பள்ளி மற்றும் 143 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், கிருஷ்ணகிரி ஒன்றியம் வெலகலஹள்ளி மற்றும் 39 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் என மொத்தம் 2022-23ம் நிதியாண்டில் ரூ.122 கோடி மதிப்பில் 7 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் எடுக்கப்பட்டு, 6 பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள எண்ணேக்கொள் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) அலுவலர்களுடன் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனாகார்க் உதவி பொறியாளர்கள் சாந்தி, கலைபிரியா, ரகோத்சிங், துணை நிலநீர் வல்லுநர்கள் கல்யாணராமன், ராதிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவ ர்களின் சேர்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களின் முன்னேற்றத்திற்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களை மாண வர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இதில், கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிக ளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிட கட்டடம் கட்டி பல ஆண்டுகளாக திறக்க ப்படாமல் விஷப்பூச்சிகளின் கூடாரமாக உள்ளதால் மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், குடிநீர் தொட்டியும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மாணவர்களுக்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களும் அறையில் வைத்து பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களை மாண வர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவ ர்களின் சேர்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலாவது மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்த ப்பட்டது. இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திம்பி, பள்ளி ஆசிரியர்கள் சிவகுமார், சகாய ஆரோக்கியராஜ், சத்தி, அமலா ஆரோக்கியமேரி, முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தேவஸ்தான ப்பள்ளி அரசு ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
- பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான சீர்வரிசைகள் கொண்டு வந்து வழங்கினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா தேவஸ்தான ப்பள்ளி அரசு ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்ந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா, ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ், உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந், சூளகிரி வட்டார கல்வி அலுவலர்கள் மகேஷ், ஜார்ஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெங்கடேஷன், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்வம், சதீஷ், கற்பகம், ஜான்ஸிராணி, புனிதா, உமாமகேஷ்வரி, ஜெயந்தி, சுபா ராணி, கற்பகம், அசோக், மகேஷ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான சீர்வரிசைகள் கொண்டு வந்து வழங்கினர். இதை பார்த்த ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் மாவட்டத்தில் முதல் முதலில் சீர்வரிசை நிகழ்ச்சி வியக்கதக்கது என்றும் கலை நிகழ்சியும் பாராட்ட தக்கது என பாராட்டினார்.
- போதிய அளவுக்கு களம் வசதிகள் இல்லை.
- மேடுபள்ளி கிராமத்தில் விளைந்த கொள்ளு பயிரை சாலையிலே போட்டு உள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சுற்றுவாட்டார பகுதியான மேடு பள்ளி, தியாகாசனப்பள்ளி, எனுசோனை, உலகம், கூலியம், எப்பளம், கூட்டூர், சின்னார்,முருக்கனப்பள்ளி, மேலுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொள்ளு விளைச்சல் அமோகமாக விளைந்து அறுவடை செய்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் போதிய அளவுக்கு களம் வசதிகள் இல்லை. அதனால் கொள்ள ப்பள்ளி- எனுேசானை செல்லும் சாலையில் மேடுபள்ளி கிராமத்தில் விளைந்த கொள்ளு பயிரை சாலையிலே போட்டு உள்ளனர்.
இப்பகுதியில் களம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
- திராவிடர் கழகம் சார்பில், சமூகநீதி கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சமூகநீதி கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மாணிக்கம், சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மண்டல மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். ஓசூர் திக மாவட்ட தலைவர் வனவேந்தன் தொடக்கவுரையாற்றினார். மண்டல செயலாளர் பழ.பிரபு கண்டன வுரையாற்றினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் முருகேசன், தனஞ்செயன், செல்வேந்திரன், கண்மணி, தங்கராசன், ஆறுமுகம், திராவிடமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்களில் தகுதி இருந்த ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகளை புறக்கணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
- இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல், நிலம் விற்பது தொடர்பாகவும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது
- நேற்று முன்தினம், வரட்டனப்பள்ளி அருகே சக்திவேல், சங்கர் உள்ளிட்டோர் கடத்தி சென்றது தெரிந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அடுத்த பாலேப்பள்ளியை சேர்ந்தவர் பாபு (வயது63), நில புரோக்கர். இவர், நேற்று முன்தினம் காலை, 8.30 மணியளவில் பாலேப்பள்ளியில் இருந்து வரட்டனப்பள்ளிக்கு பைக்கில் சென்ற போது, இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து பாபுவின் மனைவி ராஜேஸ்வரி கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார். அதில், சங்கர், சக்திவேல் உள்ளிட்டோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி பாபுவை காரில் கடத்திய சக்திவேல், என்பவரை கந்திக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த ஒழிந்தியாப்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல், சங்கர் ஆகியோர், கடத்தப்பட்ட பாபுவுடன் நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாபு, சக்திவேலிடம், 28 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
பணத்தை திருப்பி தரவில்லை. மேலும் இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல், நிலம் விற்பது தொடர்பாகவும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் பாபுவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டதால் வெளியில் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், வரட்டனப்பள்ளி அருகே சக்திவேல், சங்கர் உள்ளிட்டோர் கடத்தி சென்றது தெரிந்தது.
இச்சம்பவம் குறித்துகந்திக்குப்பம் போலீசார், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து விழுப்புரம் அருகே சென்ற சக்திவேலை போலீசார் மடக்கி பிடித்தனர். சக்திவேலை கைது செய்த கந்திக்குப்பம் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- கருமாரியம்மன் பூஜைகள், கணபதி ஹோமம், பிராதான ஹோமங்கள், நடைபெற்றது.
- புனித கலசத்திற்கு நீரை ஊற்றி அந்த புனித நீரை கீழே உள்ள பக்தர்களுக்கு தெளித்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் புதிதாக ஸ்ரீ கருமாரியம்மன் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகம் கடந்த 8 ஆம் தேதி புதன் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று இரவு கங்கா பிரகதி பூஜை, கோமாதா பூஜை, கணபதி பிரார்த்தனை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மகா சங்கபம் பூஜை, கணபதி பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் இரண்டாம் நாளான 9 ஆம் தேதி வியாழன் கிழமை துஜாரோ கனம் பூஜை, சுவாமிகள் மண்டல பூஜைகள், அம்மன் பிரதிஷ்டை, நவகிரக ஆராதனை, மகா வைத்தியம் பூஜை, பஞ்சாமிர்த பூஜை, கலச பூஜைகள் போன்ற பூஜைகள் நடைபெற்றது.
கடைசி நாளான 10-ந்தேதி காலை 5 மணி முதல் 9 மணி வரை புராணபதிஷ்டத்தை, கணபதி பிரார்த்தனை, கலச அர்ச்சனை, ஸ்ரீ கருமாரியம்மன் பூஜைகள், கணபதி ஹோமம், பிராதான ஹோமங்கள், வியாதி ஹோமம்கள் நடைபெற்றது.
பின்னர் ஆனந்த களிப்பு நடனம் ஆடி கோவிலின் மேல் உள்ள புனித கலசத்திற்கு நீரை ஊற்றி அந்த புனித நீரை கீழே உள்ள பக்தர்களுக்கு தெளித்தனர்.
அப்போது மூன்று கருடன்கள் கோவின் மேலே வந்து வட்டமிட்டது அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டுனர்.
பின்னர் ஶ்ரீ கருமாரி யம்மனுக்கு சிறப்பு அபிஷே கங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளி த்தார்.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் வேப்பனப்பள்ளி நாச்சிகுப்பம், தீர்த்தம், நேரலகிரி, மாணவரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றனர். இந்த விழாவில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
- மேலும் விழாவையொ ட்டி ஓசூர் பஸ் நிலையம் அருகே நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த் திருவிழா, அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.
தேர்த்திருவிழாவிற்கு முன்னதாக ஆண்டுதோறும் பல்லக்கு உற்சவம் கோலா கலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று இரவு திரவுபதி பூ கரகம் மற்றும் பல்லக்கு உற்சவம், விடியவிடிய நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பல்லக்கு களில் விநாயகர், சந்திரசூடேஸ்வார், முருகன் ஆஞ்சநேயர்,, பெருமாள், தர்மராஜ சுவாமி, ராமர், கிருஷ்ண சுவாமி, பாபா, கோட்டை மாரியம்மன், எல்லம்மன், காளியம்மன், துர்க்கை உள்ளிட்ட தெய்வங்களை வைத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பல்லக்கு உற்சவம் மேளதாளம் மற்றும் நையாண்டி ஆட்டத்துடன் விடிய, விடிய நடைபெற்றது.
மேலும், பூ கரகம் ஆடியவாறு நகரின் முக்கிய வீதிகளின் சென்றது. அப்போது, பொதுமக்கள் கரகத்தை வரவேற்று பூஜைகள் செய்து வழிப ட்டனர்.
மேலும் விழாவையொ ட்டி ஓசூர் பஸ் நிலையம் அருகே நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
விழாவில், ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை தேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு பல்லக்கு உற்வசத்தை கண்டு மகிழ்ந்தனர்.






