என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில்தி.க சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- திராவிடர் கழகம் சார்பில், சமூகநீதி கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சமூகநீதி கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மாணிக்கம், சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மண்டல மகளிரணி செயலாளர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். ஓசூர் திக மாவட்ட தலைவர் வனவேந்தன் தொடக்கவுரையாற்றினார். மண்டல செயலாளர் பழ.பிரபு கண்டன வுரையாற்றினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் முருகேசன், தனஞ்செயன், செல்வேந்திரன், கண்மணி, தங்கராசன், ஆறுமுகம், திராவிடமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்களில் தகுதி இருந்த ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகளை புறக்கணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.






