என் மலர்
கிருஷ்ணகிரி
- தமிழ்நாட்டில் 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
- இ-நாம் திட்டம் மூலம் சரியான எடையில், இ-நாம் சந்தையில் விற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மத்திய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு அதிக விலை கிடைத்து தங்களது வருவாயினை உயர்த்திடும் வகையில், இ&நாம் திட்டம் 2016-ம் ஆண்டு மத்திய அரசினால் தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக 22 மாநிலம் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் 1260 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இ-நாம் திட்டத்தின் படி மின்னணு வர்த்தகத்தில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை, தேசிய அளவில் சந்தைப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாயினைப் பெருக்கிடவும், நாடெங்கிலும் உள்ள வணிகர்கள் தங்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் தேவைப்படும் தரமான விளைபொருளை தேர்வு செய்து வாங்கும் வகையிலும், இ-நாம் என்னும் மின்னணு வர்த்தக பரிவர்த்தனை முறையில் இந்திய அரசு நிறுவியுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போச்சம்பள்ளி ஒழுங்குமுறைக்கூடம் ஏற்கனவே இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 10 முதல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இ-நாம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் இணைக்கப்படுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதி விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு போட்டி முறையில் அதிக விலை கிடைக்கும் வகையில், தற்போது காய்கறி மற்றும் பழங்கள் நீங்கலாக அனைத்து வேளாண் விளைபொருள்களையும் இ-நாம் திட்டம் மூலம் சரியான எடையில், இ-நாம் சந்தையில் விற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் படி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இ-நாம் எனும் மின்னணு வர்த்தகத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதால், மாநில மற்றும் தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான வணிகர்கள் ஏலத்தில் பங்கு பெற வாய்ப்பாக அமைந்துள்ளது.
எனவே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு வந்து இ-நாம் திட்டத்தின் மூலம் பயன் பெற்றிடுமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- தகராறை தடுக்க சென்ற நாகபூசணத்தை கீழே தள்ளி தாக்கிள்ளனர்.
- புகாரின் பேரில் மஞ்சுநாத், ரமேஷ், சீனிவாசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடவிசாமிபுரம் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளில் தினந்தோறும் ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் ஆகியவற்றை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் ஊர் வழியாக சென்று வருகின்றன.
நேற்று டிப்பர் லாரிகளை அடவிசாமிபுரம் கிராமத்தைச் மஞ்சுநாத்(27), ரமேஷ்(26), மற்றும் சீனிவாசன் (24) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை கண்ட அடவிசாமிபுரம் கிராமத்தைச்சேர்ந்த மதுகுமார்(24), ஜகதீஸ்(38), சுனில்குமார் (24), பிரன்சிஸ்ராஜா(32) ஆகியோர் ஏன் லாரிகளை தடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மஞ்சுநாத் தரப்பினர் மதுகுமாரை கல்லால் தாக்கியுள்ளனர்.
தடுக்க சென்ற மதுகுமார் தந்தை முனிராஜ் (50) என்பரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த எஸ்எஸ்ஐ நாகபூசணம் (51) மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்து கொண்டிருந்த போது மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தகராறை தடுக்க சென்ற நாகபூசணத்தை கீழே தள்ளி தாக்கிள்ளனர். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த நாகபூசணம், மதுகுமார், முனிராஜ் ஆகியோர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து முனிராஜ் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மஞ்சுநாத், ரமேஷ், சீனிவாசன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அதே போல் மஞ்சுநாத் தரப்பில் ராஜப்பா மகன் தர்சன்(17) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜகதீஸ், சுனில்குமார், பிரான்சிஸ் ஆகிய மூவரை கைது செய்தனர். கைதான 6 பேரை தேன்கனிக்கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இருத்தரப்பினர் மற்றும் பலரை தேடி வருகின்றனர்.
- மாணவர்களின் திறன் மேம்பட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பாத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்
- இதில் 40-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
ஓசூர்
அதியமான் பொறியியல் கல்லூரி, சென்னை செயின்ட் பீட்டர்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றின் சார்பில், புதிய காலத்திற்கான தொழில்நுட்ப கல்வி" என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் உள்ள விப்ரோ ஆடிட்டோரியத்தில் நடந்த கருத்தரங்கிற்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், "பொறியியல் மாணவர்களின் திறன் மேம்பட பயிற்சி தேவை. மின்சார வாகனங்கள், புதிய மின்கலங்கள் தரவுகளின் அடிப்படையில் தீர்வுகள் செயற்கை நுண்ணறிவு மனிதருடன் இணைந்து செயல்படும் ரோபோக்கள் போன்ற புதிய சூழலில் பொறியியல் பாடத்திட்டத்தில் மாற்றம் அவசியம் என்று வலியுறுத்தினார்.முன்னதாக, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி அறங்காவலர் டாக்டர்.த.லாஸ்யா வரவேற்றார். கருத்தரங்கில் பேசிய பெங்களூருவில் உள்ள இந்திய மின்னணு மற்றும் குறைகடத்தி அமைப்பின் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பைவ் ஸ்கொயர் நிறுவன முதன்மை அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர், மின்சார வாகனங்கள் மற்றும் அதன் பயன்பாட்டில் மென்பொருள் பங்கு, குறைகடத்திகள், சிலிகான் சில்லு, போன்ற பிரிவுகளில் பொறியியல் மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும். தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் தங்கள் மாணவர்களின் திறன் மேம்பட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பாத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கூறினர். இதில் 40-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர்,செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி அறங்காவலர் டாக்டர்.லாஸ்யா கூறுகையில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, சென்னை செயின்ட் பீட்டர்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம், , கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த திறன் பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
- சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்த இப்பள்ளியின் தாளாளர் எம்.வேடியப்பன் தனது அயராத உழைப்பாலும் உயர்ந்தவர்.
- மாணவ, மாணவிகள் உங்களுடைய இலக்கை குறி வைத்து நீங்கள் வெற்றி பெற வேண்டும்
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி 10 -ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன் தலைமை வகித்தார்.
ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வே.சாந்தி வேடியப்பன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சின்னப்பகவுண்டர், கம்பைநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் மாசிலாமணி, கம்பை நல்லூர் பேரூராட்சி தலைவர் த.வடமலை முருகன், கம்பைநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் சா.மதியழகன், ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் த.பவானி தமிழ்மணி வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் விஜய் டி.வி.யின் நீயா, நானா புகழ் சி.கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்த இப்பள்ளியின் தாளாளர் எம்.வேடியப்பன் தனது அயராத உழைப்பாலும், நேர்மையாலும், எளிமையான நட்பாலும் இன்றைக்கு மாநில அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைக்கும் இப்பள்ளியை உருவாக்கி உள்ளார்.
பள்ளி வாழ்க்கை தான் மாணவ, மாணவிகளின் மறக்க முடியாத நாட்க ளாகும். பள்ளி நிர்வாகம், ஆசிரிய, ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் நீண்ட காலம் மனதில் இருப்பார்கள். எனவே உங்களுடைய இலக்கை குறி வைத்து நீங்கள் வெற்றி பெற வேண்டும் என இந்த நேரத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் காரிமங்கலம் பேரூராட்சி தலைவரும், பி.சி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான பி.சி.ஆர்.மனோகரன், தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலரும், எஸ்.எஸ்.எஸ். நகை கடை அதிபருமான சி.சக்திவேல், திருவண்ணாமலை சீனிவாசன்,சேலம் அசோக்குமார்,காஞ்சிபுரம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் முன்னேற்ற அறிக்கையினை வாசித்தார்கள்.
முடிவில் ஸ்ரீ ராம் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ஆர். சன்மதி ராஜாராம் நன்றி கூறினார்.
- யானை நள்ளிரவு மின்சாரம் தாக்கி பரிதாப மாக உயிரிழந்தது.
- இன்றுகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.
இந்த யானை நள்ளிரவு மின்சாரம் தாக்கி பரிதாப மாக உயிரிழந்தது. இதனை இன்றுகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பேருந்தில் கொண்டு செல்வது தெரிய வந்தது.
- சீதாராமனை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கயலூர் பகுதியை சேர்ந்த சீதாராமன் (வயது 28) 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பேருந்தில் கொண்டு செல்வது தெரிய வந்தது.
பின்னர் சீதாராமனை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- லாரி மோதியதில் 3 பேரும் படுகாயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே 9 மாத கைக்குழந்தை உயிரிழந்தது.
- இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது35). இவருக்கு திருமணம் ஆகிவேள்வி (22) என்ற மனைவியும், சித்தார்த் 9 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முரளி மற்றும் மனைவி கைக்குழந்தையுடன் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சாம்பல் பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஊத்தங்கரை தனியார் பள்ளி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் 3 பேரும் படுகாயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே 9 மாத கைக்குழந்தை உயிரிழந்தது.
படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேள்வியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மனவிரக்தி அடைந்த ஷோபா விஷம் குடித்தார்.
- அது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே முருக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி ஷோபா (வயது 19). இவர்களுக்கு 8 மாதம் முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணத்தினால் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டில் யாரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனவிரக்தி அடைந்த ஷோபா விஷம் குடித்தார். அருகில் இருந்தவர் சேலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஷோபா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இறப்பு குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கம்பைநல்லூர் அடுத்த பூமசமுத்திரம் பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
- வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்ைபநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி குஞ்சம்மாள் (வயது52). இவர் நேற்று உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கம்பைநல்லூர் அடுத்த பூமசமுத்திரம் பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனை பார்த்து பிரேக் போட்டதால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குஞ்சம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோண்டி பார்த்தபோது அதில் 12 அடி நீளமுள்ள 3 மலைப்பாம்புகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
- 3 மலைப்பாம்புகளையும் பிடித்து கிருஷ்ணகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள எமக்கல்நத்தம் காந்திநகரை சேர்ந்தவர் குணரூபன். விவசாயி. இவர் நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு ஒரு மலைப்பாம்பு இருந்தது.
இதுகுறித்து அவர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பார்த்தபோது அந்த மலைப்பாம்பு விவசாய நிலத்தில் உள்ள சிறு ஓடையின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு அடியில் புகுந்து கொண்டது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது அதில் 12 அடி நீளமுள்ள 3 மலைப்பாம்புகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தன், சின்னமுத்து, பொன்னுமணி 3 மலைப்பாம்புகளையும் பிடித்து கிருஷ்ணகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்புகளை விட்டனர்.
- பசுவேரஸ்வர சுவாமிக்கு மாஹா ருத்ராஅபிசேகம், அகனிகுண்டம் நடைபெற்றது.
- விழாவில் காநாடக மாடாதிபதிகள் கலந்து கொண்டு ஆனமீக சொற்பொழிவு நிகழ்த்தினர்.
தேன்கனிக்கோட்டை,
அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி காவேரி கரையோரம் உள்ள தப்பகூளி பசுவேஸ்வர சாமி கோவில் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மஞ்சுகொண்டப்பள்ளி கிராமத்தினரால் பல்லக்கு உற்வம் நடைபெற்றது. நேற்று காலை பசுவேரஸ்வர சுவாமிக்கு மாஹா ருத்ராஅபிசேகம், அகனிகுண்டம் நடைபெற்றது. விழாவில் காநாடக மாடாதிபதிகள் கலந்து கொண்டு ஆனமீக சொற்பொழிவு நிகழ்த்தினர்.
விழாவில் மஞ்சுகொண்டப்பள்ளி, கோட்டையூர்,உரிகம், அஞ்செட்டி, தக்கட்டி, மாடக்கல் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்,
- வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.
- நள்ளிரவு மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு மின்சாரம் தாக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






